இவங்க 2 பேரும் கொடுத்த நம்பிகை தான்.. நான் மீண்டும் பார்முக்கு வர காரணம்





அபிஷேக் சர்மா


– விளம்பரம் –

இந்திய அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா தற்போது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகளில் மூன்று ஆட்டங்களிலும் டக் அவுட்டான அவர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியிலும் 15 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றம் அளித்திருந்தார். ஆனாலும் அவருக்கு தொடர்ந்து நிர்வாகம் ஆதரவு வழங்கியது.

நான் பார்முக்கு திரும்ப இவர்கள் 2 பேர் தான் காரணம் : அபிஷேக் சர்மா

அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியிலும் இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 55 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இப்படி மீண்டும் சிறப்பான பேட்டிங் பார்முக்கு திரும்பியுள்ள அவர் சரியான நேரத்தில் பார்முக்கு வந்துள்ளார்.

– விளம்பரம் –

அதனால் எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணியை அரையிறுதிக்கு அழைத்துச் செல்வார் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அதேபோன்று இனிவரும் ஆட்டங்களில் அவர் அசத்தும் பட்சத்தில் இந்திய அணி இந்த டி20 உலக கோப்பையை வெல்லவும் வாய்ப்புள்ளது என்றும் பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தான் மீண்டும் பேட்டிங் பார்முக்கு திரும்ப காரணமே நிர்வாகம் அளித்த ஆதரவு தான் என்றும் குறிப்பாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனக்கு உறுதுணையாக இருந்தனர் என்றும் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் விரும்பியபடி இந்த உலக கோப்பை தொடரானது அமையவில்லை. ஆரம்பத்திலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டேன். பிறகு அடுத்தடுத்த போட்டிகளில் டக் அவுட் ஆனேன்.

– விளம்பரம் –

இதையும் படிங்க : தந்தை இறந்த அடுத்த நாளே ரிங்கு சிங் எடுத்த நெகிழ்ச்சியான முடிவு – விவரம் இதோ

இருந்தாலும் எனக்கு தொடர்ச்சியாக உறுதுணை கிடைத்தது. குறிப்பாக பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ஆகிய இருவரும் எனக்கு காட்டிய அன்பும், ஆதரவும் மிக அதிகம். நான் தொடர்ச்சியாக டக் அவுட்டானாலும் அனைத்து போட்டிகளிலும் நான் விளையாடுவேன் என்று அவர்கள் உறுதி கொடுத்திருந்தார்கள். அவர்கள் அளித்த நம்பிக்கையே நான் மீண்டும் பார்மிற்கு திரும்ப காரணம் என அபிஷேக் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்









Thank You

Related Posts

ஆயுஷ் மாத்ரேவுக்கு பதிலா இந்த 2 பேர்ல ஒருத்தரை செலக்ட் பண்ணலாம்

– விளம்பரம் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் நட்சத்திர வீரரான ஆயுஷ் மாத்ரே இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் தனது அற்புதமான பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்தி சென்னை அணியின்…

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 6 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ஆயுஷ் மாத்ரேவுக்கு பதிலா இந்த 2 பேர்ல ஒருத்தரை செலக்ட் பண்ணலாம்

  • By admin
  • April 23, 2026
  • 7 views
ஆயுஷ் மாத்ரேவுக்கு பதிலா இந்த 2 பேர்ல ஒருத்தரை செலக்ட் பண்ணலாம்

சட்டமன்ற தேர்தல் 3 மணி நிலவரம் :   70  சதவிகிதம் வாக்குப்பதிவு, 4 கோடி பேர் வாக்களிப்பு   – Kumudam

  • By admin
  • April 23, 2026
  • 12 views
சட்டமன்ற தேர்தல் 3 மணி நிலவரம் :   70  சதவிகிதம் வாக்குப்பதிவு, 4 கோடி பேர் வாக்களிப்பு   – Kumudam

கூட்டத்தில் சிக்கிய நடிகை நிதி அகர்வால்: அத்துமீறிய ரசிகர்கள்  – Kumudam

  • By admin
  • April 23, 2026
  • 19 views
கூட்டத்தில் சிக்கிய நடிகை நிதி அகர்வால்: அத்துமீறிய ரசிகர்கள்  – Kumudam

தமிழக சட்டமன்ற வாக்குப்பதிவு நிறைவு: கடந்த தேர்தலை விட கூடுதல் வாக்கு பதிவாக சாதனை  – Kumudam

  • By admin
  • April 23, 2026
  • 4 views
தமிழக சட்டமன்ற வாக்குப்பதிவு நிறைவு: கடந்த தேர்தலை விட கூடுதல் வாக்கு பதிவாக சாதனை  – Kumudam

சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு விறுவிறு : 1 மணி வரை 56.81 சதவிகிதம் வாக்கு பதிவு  – Kumudam

  • By admin
  • April 23, 2026
  • 8 views
சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு விறுவிறு : 1 மணி வரை 56.81 சதவிகிதம் வாக்கு பதிவு  – Kumudam

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

  • By admin
  • April 23, 2026
  • 5 views
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்
.site-info { display: none; }