ஆயுஷ் மாத்ரேவுக்கு பதிலா இந்த 2 பேர்ல ஒருத்தரை செலக்ட் பண்ணலாம்





அஸ்வின் மற்றும் ஆயுஷ்


– விளம்பரம் –

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் நட்சத்திர வீரரான ஆயுஷ் மாத்ரே இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் தனது அற்புதமான பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்தி சென்னை அணியின் முக்கிய வீரராக இடம் பிடித்து விளையாடி வந்தார். இந்த தொடரில் சி.எஸ்.கே அணிக்காக மூன்றாவது இடத்தில் களமிறங்கி பேட்டிங் செய்யும் அவர் முதல் 6 போட்டிகளில் 177 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 201 ரன்களை குவித்து அசத்தியிருந்தார். அதனால் சென்னை அணியின் மிக முக்கியமான வீரராகவும் அவர் பார்க்கப்பட்டார்.

ஆயுஷ் மாத்ரேவுக்கு பதிலா 2 பேர்ல ஒருத்தர தேர்வு செய்யுங்க : அஷ்வின் பதிவு

ஆனால் கடைசியாக ஏப்ரல் 18-ஆம் தேதி சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது அவருக்கு தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அந்த போட்டியில் காயத்தோடு அவர் தொடர்ந்து விளையாடியதால் தசைநார் கிழிவு ஏற்பட்டு தற்போது அவர் 2026 ஐ.பி.எல் தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி உள்ளார்.

– விளம்பரம் –

இது குறித்த தகவலை வெளியிட்ட சிஎஸ்கே அணியின் நிர்வாகமும் : ஆயுஷ் மாத்ரே எஞ்சியுள்ள இந்த 2026 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறார் என்றும் தொடைப்பகுதியில் அவருக்கு ஏற்பட்ட காயம் குணமடைய 6 முதல் 12 வாரங்கள் ஆகும் என்பதனால் அவர் சிகிச்சையையும், ஓய்வையும் எடுக்க இருக்கிறார் என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஆயுஷ் மாத்ரே இப்படி இந்த தொடரில் பாதியிலேயே வெளியேறியதால் அவருக்கு பதிலாக எந்த வீரர் சிஎஸ்கே அணிக்குள் இணையப்போகிறார்? என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இவ்வேளையில் சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் ஆயுஷ் மாத்ரேவிற்கு பதிலாக 19 வயதுக்கு உட்பட்டோர் இந்திய அணியில் மிகச் சிறப்பாக விளையாடிய விஹான் மல்ஹோத்ரா அல்லது அபிங்யான் குண்டு ஆகிய இருவரில் ஒருவரை தேர்வு செய்யலாம் என தனது ஆலோசனைகளை தெரிவித்துள்ளார்.

– விளம்பரம் –

இதையும் படிங்க : கிரிஸ் கெயில் மற்றும் ஆண்ட்ரே ரசலுக்கு அடுத்து 3 ஆவது வீரராக ஹென்றிச் கிளாஸன் – நிகழ்த்திய சாதனை

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் : தற்போது காயம் காரணமாக ஆயுஷ் மாத்ரே வெளியேறியுள்ளார். எனவே ஏழாவது போட்டிக்கு முன்னதாக வளர்ந்து வரும் இளம் வீரர்களான விஹான் மல்ஹோத்ரா அல்லது அபிங்யான் குண்டு ஆகிய இருவரில் ஒருவரை அணியில் எடுத்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் அப்படி இருந்தால் நிச்சயம் அது ஒரு நல்ல தேர்வாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்









Thank You

Related Posts

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 6 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று…

ஜஸ்ப்ரீத் பும்ராவின் ஆல்டைம் சாதனையை காலி செய்து வரலாறு படைத்த அஷ்வினி குமார் – விவரம் இதோ

ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முக்கியமான லீக் ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி அசத்தியது. அந்த போட்டியில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ஆயுஷ் மாத்ரேவுக்கு பதிலா இந்த 2 பேர்ல ஒருத்தரை செலக்ட் பண்ணலாம்

  • By admin
  • April 23, 2026
  • 7 views
ஆயுஷ் மாத்ரேவுக்கு பதிலா இந்த 2 பேர்ல ஒருத்தரை செலக்ட் பண்ணலாம்

சட்டமன்ற தேர்தல் 3 மணி நிலவரம் :   70  சதவிகிதம் வாக்குப்பதிவு, 4 கோடி பேர் வாக்களிப்பு   – Kumudam

  • By admin
  • April 23, 2026
  • 12 views
சட்டமன்ற தேர்தல் 3 மணி நிலவரம் :   70  சதவிகிதம் வாக்குப்பதிவு, 4 கோடி பேர் வாக்களிப்பு   – Kumudam

கூட்டத்தில் சிக்கிய நடிகை நிதி அகர்வால்: அத்துமீறிய ரசிகர்கள்  – Kumudam

  • By admin
  • April 23, 2026
  • 18 views
கூட்டத்தில் சிக்கிய நடிகை நிதி அகர்வால்: அத்துமீறிய ரசிகர்கள்  – Kumudam

தமிழக சட்டமன்ற வாக்குப்பதிவு நிறைவு: கடந்த தேர்தலை விட கூடுதல் வாக்கு பதிவாக சாதனை  – Kumudam

  • By admin
  • April 23, 2026
  • 4 views
தமிழக சட்டமன்ற வாக்குப்பதிவு நிறைவு: கடந்த தேர்தலை விட கூடுதல் வாக்கு பதிவாக சாதனை  – Kumudam

சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு விறுவிறு : 1 மணி வரை 56.81 சதவிகிதம் வாக்கு பதிவு  – Kumudam

  • By admin
  • April 23, 2026
  • 8 views
சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு விறுவிறு : 1 மணி வரை 56.81 சதவிகிதம் வாக்கு பதிவு  – Kumudam

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

  • By admin
  • April 23, 2026
  • 5 views
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்
.site-info { display: none; }