பயணிகள் கவனத்திற்கு.. மெட்ரோ ரயிலில் இதெல்லாம் செய்தால் இனி அபராதம்.. நிறுவனம் எச்சரிக்கை | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

விதிகளை மீறி மற்றவர்களுக்கு இடையூறு செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில்
மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ ரயில் பயண ஒழுங்குமுறைகள், விதிகளை மீறி மற்றவர்களுக்கு இடையூறு

செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மெட்ரோ ரயில் பயண ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி, சக பயணிகளின் வசதிக்கும் அமைதிக்கும் மதிப்பளிக்குமாறு அனைத்துப் பயணிகளையும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

மெட்ரோ இரயில் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) சட்டம் 2002 பிரிவு 59-ன் கீழ், சக பயணிகளுக்குத் தொந்தரவு விளைவிப்பதோ அல்லது அவர்களின் வசதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.

குறிப்பாக அலைபேசியில் உரத்த குரலில் உரையாடுதல், செவியில் பொருத்தி கொள்ளும் ஒலிபெருக்கி (Headphones) இன்றி இசை அல்லது வீடியோக்களைப் பார்ப்பது, அலைபேசியில் மெட்ரோ ரயில்களிலும் வளாகங்களிலும் ஒலிபெருக்கி வசதியைப் பயன்படுத்துதல் (Speaker mode) உள்ளிட்ட மேற்கண்ட செயல்கள் மூலம் அதிகப்படியான இரைச்சலை ஏற்படுத்தும் வகையில் அலைபேசிகளைப் பயன்படுத்துவதும் மற்றவர்களுக்கு இடையூறு விளைவிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.

இந்தச் சட்டத்தின்படி, விதியை மீறும் பயணிகளுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும், தேவைப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் மெட்ரோ வளாகத்திலிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளது.

எனவே பயணிகளின் பயணச் சூழலைக் கருத்தில் கொண்டு, அனைவரும் ஹெட்போன்களைப் பயன்படுத்துமாறும், மெட்ரோ ரயில் மற்றும் அதன் வளாகத்திற்குள் உரத்த குரலில் உரையாடுதல் மற்றும் ஸ்பீக்கர் மோட் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.



Thank You

Related Posts

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – மதுகேசவ்  பொற்கண்ணன் “உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந் தேர்க்கு/ அச்சாணி அன்னார் உடைத்து” (குறள் 667) என்று நமக்கு வாழ்க்கைப் பாதையை உணர்த்துகின்றார் வள்ளுவர். பெரும்பாலானப்  பழையத் திரைப்படங்களில், நகைச்சுவைக் காட்சி…

விஜயை தேர்தலில் தோற்கடித்து மீண்டும் சினிமாவுக்கே அனுப்ப வேண்டும் – நடிகர் சத்யராஜ் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 19, 2026 8:24 AM IST குறைந்த சம்பளம் வாங்கும் தன்னையே மக்கள் எளிதாக சந்தித்து பிரச்சனையை சொல்ல முடியாத நிலையில், பெரிய சம்பளம் வாங்கும் விஜயை எப்படி போய் பார்க்க முடியும் என்று கேள்வியெழுப்பினார். சத்யராஜ் –…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 10 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 7 views
தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam

40 நாள் ஈரான் போருக்கு  $17.5 பில்லியன் (ரூ.1.6 லட்சம் கோடி) வீண் விரயம் செய்த இஸ்ரேல் – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 9 views
40 நாள் ஈரான் போருக்கு  $17.5 பில்லியன் (ரூ.1.6 லட்சம் கோடி) வீண் விரயம் செய்த இஸ்ரேல் – Kumudam

அர்ஜென்டினாவில் நடந்த 4 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி

  • By admin
  • April 19, 2026
  • 8 views
அர்ஜென்டினாவில் நடந்த 4 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி

சி.எஸ்.கே-வின் போராட்டம் வீண்… பவுலிங்கிலும் கலக்கிய ஐதராபாத் அசத்தல் வெற்றி

  • By admin
  • April 19, 2026
  • 7 views
சி.எஸ்.கே-வின் போராட்டம் வீண்… பவுலிங்கிலும் கலக்கிய ஐதராபாத் அசத்தல் வெற்றி

ஐபிஎல் 2026ல் ரிங்கு சிங்கின் மோசமான ஆட்டத்திற்கு 3 முக்கிய காரணங்கள்

  • By admin
  • April 19, 2026
  • 6 views
ஐபிஎல் 2026ல் ரிங்கு சிங்கின் மோசமான ஆட்டத்திற்கு 3 முக்கிய காரணங்கள்
.site-info { display: none; }