– விளம்பரம் –
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மாவிற்கு நடைபெற்று வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரானது அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. லீக் சுற்று ஆட்டங்களில் மூன்று போட்டிகளில் விளையாடிய அவர் மூன்று போட்டிகளிலுமே டக் அவுட்டாகியிருந்தார். அதன் பின்னர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்றின் 15 ரன்கள் குவித்த அவர் நேற்று ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 55 ரன்கள் குவித்து ஓரளவு சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.
அபிஷேக் சர்மாவுக்கு அறிவுரை வழங்கிய : ரவிச்சந்திரன் அஷ்வின்
இந்த தொடரில் தனது முதலாவது அரைசதத்தை பதிவு செய்த அவர் மீண்டும் பார்மிற்கு திரும்பியுள்ளதால் இனிவரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில் அபிஷேக் ஷர்மா தற்போது அதிரடியாக விளையாட தடுமாறுகிறார் என்றும் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அவருக்கு தடுமாற்றம் இருக்கிறது என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
– விளம்பரம் –
இந்நிலையில் இந்திய அணியின் துவக்க வீரரான அபிஷேக் சர்மா மீண்டும் தனது இயல்பான பார்மிற்கு திரும்ப என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து சில அறிவுரைகளை இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் அவருக்கு வழங்கியுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
அபிஷேக் சர்மாவுக்கு யுவராஜ் சிங்கை விட பேட் ஸ்விங் திறமை மிகவும் அதிகமாக இருக்கிறது. அதன் காரணமாகவே அவர் அடிக்கும் பந்துகள் வெகு தூரத்திற்கு சென்று விழுகின்றன. மக்கள் அவரை ஒரு சக்தி வாய்ந்த ஸ்லாகராக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அபிஷேக் ஷர்மா செய்யும் ஒரே தவறு அவர் எல்லா பந்துகளையும் அடிக்க நினைப்பதுதான்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : இந்த 2 விடயத்தில் ஒன்னையாவது செய்யுங்க.. சஞ்சு சாம்சனுக்கு அஷ்வின் வேண்டுகோள் – விவரம் இதோ
அபிஷேக் ஷர்மா தனது சக்தியை பயன்படுத்தாமல் சரியான பந்துகளை டைம் செய்து அடித்தால் சிக்ஸர்களுக்கு செல்லும். இதை யாராவது அவரிடம் சொல்ல வேண்டும் சரியான பந்துகளை சரியான டைமிங்கில் அடித்தால் அவரால் பெரிய ரன்களை குவிக்க முடியும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்