– விளம்பரம் –
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா தற்போது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் 2026 ஆம் ஆண்டிற்கான டி20 கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே மிகச்சிறப்பாக விளங்கும் பாண்டியாவின் பங்களிப்பு மிகச் சிறப்பாக இருப்பதனால் இந்திய அணி முக்கியமான வெற்றிகளையும் பெற்று வருகிறது.
முன்னாள் வீரர்களின் சாதனையை சமன் செய்த ஹார்டிக் பாண்டியா :
அந்த வகையில் ஏற்கனவே சூப்பர் 8 சுற்றின் போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வியடைந்த வேளையில் அடுத்ததாக நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி விளையாடியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது.
– விளம்பரம் –
இந்த போட்டியின் போது பேட்டிங்கில் ஐந்தாவது வீரராக களமிறங்கிய ஹார்டிக் பாண்டியா 23 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என ஆட்டம் இழக்காமல் அரைசதம் அடித்திருந்தார். அதுமட்டுமின்றி 3 ஓவர்களையும் அவர் வீசியிருந்தார். இதன் காரணமாக அவருக்கு அந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் அவர் பெற்ற இந்த ஆட்டநாயகன் விருதின் மூலம் முன்னாள் இந்திய வீரர்களான ரோகித் சர்மா, அஸ்வின், யுவராஜ் சிங் ஆகியோரது சாதனையை அவர் சமன் செய்துள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் அவருக்கு கிடைத்த ஆட்டநாயகன் விருது டி20 உலக கோப்பையில் அவருக்கு கிடைத்த மூன்றாவது ஆட்டநாயகன் விருதாகும்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : இவங்க 2 பேரும் கொடுத்த நம்பிகை தான்.. நான் மீண்டும் பார்முக்கு வர காரணம் – அபிஷேக் சர்மா பேச்சு
இதன்மூலம் டி20 உலக கோப்பை போட்டியில் அதிக முறை ஆட்டநாயகன் விருதினை பெற்று மூன்றாவது இடத்தில் இருந்த இவர்கள் மூவரது சாதனையும் ஹார்டிக் பாண்டியா சமன் செய்துள்ளார். டி20 உலககோப்பை போட்டிகளில் இந்திய அணிக்காக அதிகமுறை ஆட்டநாயகன் விருதினை வென்ற வீரராக விராட் கோலி 8 முறை ஆட்டநாயகன் விருது பெற்று முதல் இடத்திலும், சூரியகுமார் யாதவ் 4 முறை ஆட்டநாயகன் விருதினை வென்று இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்