– விளம்பரம் –
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி கடந்த சில ஆண்டுகளாகவே தனது முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பின் வரிசையில் களமிறங்கி விளையாடி வருகிறார். அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக அவர் ஒன்பதாவது இடத்தில் களமிறங்கியது பெரியளவில் விமர்சனத்திற்கு உள்ளாகியது.
தோனியின் பேட்டிங் ஆர்டர் குறித்து பேசிய : புஜாரா
தோனியை போன்று அதிரடியாக விளையாடும் வீரர் ஆட்டத்தை மாற்றக்கூடிய நேரத்தில் வந்து தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கும் வேளையில் 5 அல்லது 10 பந்துகள் மட்டுமே மீதம் இருக்கும் நிலையில் வந்து ஒரு சில பவுண்டரிகளை அடித்து விட்டு செல்கிறார். இதனால் அவரது பேட்டிங் ஆர்டரின் மீது தொடர்ந்து பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
– விளம்பரம் –
அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தோனியின் பேட்டிங் ஆர்டர் குறித்து பேசிய இந்திய அணியின் அனுபவ வீரரான புஜாரா சி.எஸ்.கே அணியில் தோனி எட்டாவது அல்லது ஒன்பதாவது இடத்தில் பேட்டிங் செய்ய வருவதில் அர்த்தமே இல்லை என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
தோனி எட்டாவது அல்லது ஒன்பதாவது இடத்தில் பேட்டிங் செய்ய வருவது நியாயமற்றது. ஏனெனில் அவரை போன்ற ஒரு அதிரடியான வீரர் தனியாக நின்று போட்டியின் நிலையை மாற்றக்கூடிய திறன் கொண்டவர். எனவே சிஎஸ்கே அணியில் அதுபோன்ற ஒரு வீரர் 5 அல்லது 10 பந்துகளை எதிர்கொண்டால் என்ன செய்ய முடியும்?
– விளம்பரம் –
இதையும் படிங்க : தெ.ஆ ஒரு முட்டாள் அணி.. இதை மட்டும் செய்திருந்தா இந்தியா வெளிய போயிருக்கும் – மைக்கல் வாகன் விமர்சனம்
ஆனால் 25 முதல் 30 பந்துகளை எதிர்கொண்டால் அவரால் நிச்சயம் போட்டியை மாற்ற முடியும் எனவே தோனி இந்த தொடரில் டாப் ஆர்டரில் வந்து பேட்டிங் செய்ய வைத்தால் அது சிஎஸ்கே அணிக்கு மேலும் பலத்தை சேர்க்கும் என புஜாரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விளம்பரம்