அண்மையில் நடைபெற்று முடிந்த 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. ஏற்கனவே இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்ற இந்திய அணி இந்த 2026 டி20 உலக கோப்பை தொடரையும் வென்றதோடு அடுத்தடுத்த கோப்பைகளை வென்ற முதல் அணியாகவும், மூன்று முறை டி20 உலககோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியாகவும் சாதனையை நிகழ்த்தியது. இந்திய அணி பெற்ற இந்த வெற்றிக்கு பரிசுத்தொகை மட்டுமின்றி பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.
நான் கிரிக்கெட் விளையாடுவதே இதற்காகத்தான் : பும்ரா நெகிழ்ச்சி
இந்த டி20 உலக கோப்பை தொடரை பொருத்தவரை இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வேளையில் பந்துவீச்சாளர்களில் பும்ரா மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தார். இந்த உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரை 14 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதினையும் வென்றிருந்தார்.
பும்ராவின் செயல்பாடு இந்த தொடர் முழுவதுமே மிகச் சிறப்பாக இருந்ததை ஒட்டி பலரும் அவரது பந்துவீச்சை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த தொடர் முடிந்த கையோடு பும்ரா அளித்த பேட்டி ஒன்றில் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : சவால்களை பார்த்து ஓடி ஒளிந்து கொள்ள விரும்புபவன் நான் கிடையாது. எப்பொழுதுமே அழுத்தமான வேளையிலும் என்னுடைய பொறுப்பை சிறப்பாக செய்ய வேண்டும் என்பது மட்டும்தான் என்னுடைய எண்ணம்.
போட்டியின் அழுத்தமான சூழ்நிலைகளில் சவாலான வேளையையும் கடந்து சிறப்பாக விளையாட முயற்சி செய்கிறேன். நான் கிரிக்கெட் விளையாட துவங்கியதே சவால்களை எதிர்கொள்ளத்தான். அந்த வகையில் போட்டியின் எந்த ஒரு முக்கியமான தருணத்திலும் என்னால் முடிந்த அனைத்தையும் அணிக்காக வழங்கி வருகிறேன். கடந்த 2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலககோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இதே மைதானத்தில் தான் தோல்வியடைந்தோம்.
இதையும் படிங்க : அந்த இடத்தில் பேட்டிங் செய்வதால் புண்ணியமே இல்ல.. தோனியின் பேட்டிங் ஆர்டர் குறித்து – புஜாரா கருத்து
ஆனால் இம்முறை அங்கு சாம்பியன் பட்டத்தை வென்றதும் எனது குடும்பத்தினர் முன்னிலையில் நான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டதும் மிகவும் மகிழ்ச்சி. இந்த மறக்க முடியாத தருணத்தை வழங்கிய கடவுளுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது என்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா நெகிழ்ச்சியுடன் பேசியது குறிப்பிடத்தக்கது.
பதவி பிரஷர் இருந்தா எனக்கு ரொம்ப புடிக்கும்.. இதுக்காக தான் கிரிக்கெட் விளையாடுறேன் – பும்ரா ஓபன்டாக் முதலில் தோன்றியது கிரிக் தமிழ்.