App-ல் ஏற்பட்ட பழக்கம்… கத்திமுனையில் அழைத்துச் சென்று கொள்ளை… மூவரை தட்டித் தூக்கிய போலீஸ்… | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

கோவையில் எங்கெல்லாம் கல்லூரி மாணவர்கள் தனியாக அறை எடுத்து தங்கி உள்ளார்கள்? என்பதை நோட்டமிட்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது உறுதியாகி உள்ளது.

கோவை வழிப்பறி
கோவை வழிப்பறி

கோவை மாவட்டம் சூலூர் அருகே போலீசாரை அரிவாளால் வெட்டி தப்பிக்க முயன்ற வழிப்பறி கும்பலின் தலைவனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்துள்ளனர். கல்லூரி மாணவர்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்டு அலறவிட்டு வந்தவருக்கு, எண்டுகார்டு போடப்பட்டதன் பின்னணி என்ன?

கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் ஏராளமான தனியார் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அங்கு படிக்கும் மாணவர்களின் கல்லூரி விடுதி கட்டணம் கூடுதல் என்பதால், அதில் பலர் வெளியே வாடகைக்கு அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்படி தங்கியுள்ள மாணவர்களின் அறைகளை குறிவைத்து, பூட்டை உடைத்து லேப்டாப் செல்போன் உள்ளிட்ட பொருட்களைத் திருடுவது, தனியாக சிக்கும் மாணவர்களை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபடுவது என கோவையை குற்ற குடோனாக சிலர் மாற்றி வருகின்றனர். அதில் முக்கிய குற்றவாளி பாலமுருகன்.

இவர் மாஸ்டர் பட பவானியை போல கொடூர கூட்டாளிகளை வைத்து கல்லூரி மாணவர்களை அச்சுறுத்தி வந்துள்ளார். பாலமுருகனால் பாதிக்கப்பட்ட பல மாணவர்கள் போலீசில் அடுத்தடுத்து புகார் அளிக்க, இனியும் அவரை விட்டுவைத்தால், கோவை குற்ற கூடாரமாக மாறிவிடும் என களத்தில் இறங்கினர்.

சூலூர் அருகே ஒரு வீட்டில் பதுங்கி இருந்த பாலமுருகனை தனிப்படை போலீசார் பிடிக்கச் சென்றபோது, அவர் அரிவாளால் காவல் உதவி ஆய்வாளர் யுவராஜை வெட்டி விட்டு தப்பிக்க முயன்றுள்ளார். இதனால், தற்காப்பிற்காக ஆய்வாளர் பிரேம் ஆனந்த், பாலமுருகனை துப்பாக்கியால் சுட்டதில் அவரது வலது காலில் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தார். குண்டு பாய்ந்து வலியால் அலறிய பாலமுருகனை மீட்டு, சிகிச்சைக்காக சூலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Thank You

Related Posts

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 19, 2026 10:09 PM IST திருச்சி விமான நிலையம் அருகே விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர முயன்றகூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் லேசான தடியடி நடத்தினர் செய்தி18 திருச்சி கிழக்குத் தொகுதியில் மூன்றாவது முறையாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட நடிகர் விஜய்,…

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – மதுகேசவ் பொற்கண்ணன் எவரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு திறமை இருக்கத்தான் செய்யும். ஒருவர் பெற்றத் திறமை மற்றவரிடம் இல்லை என்பதற்காக அவரைக் குறைவாக எண்ணக்கூடாது. அவரவர்க்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

மாம்பழம் சின்னம் முடக்கக்கோரி மேல்முறையீடு: ராமதாசு மனுவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 9 views
மாம்பழம் சின்னம் முடக்கக்கோரி மேல்முறையீடு: ராமதாசு மனுவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு  – Kumudam

Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

  • By admin
  • April 20, 2026
  • 11 views
Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

  • By admin
  • April 20, 2026
  • 7 views
நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

Latest CompTIA Security+ SY0-701 Exam Questions and Answers – Study Online – TN News

  • By admin
  • April 20, 2026
  • 7 views

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

  • By admin
  • April 19, 2026
  • 3 views
லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 19, 2026
  • 9 views
திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
.site-info { display: none; }