ஆதார் அட்டை  இருந்தால் மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனுமதி: காவல்துறை சொன்ன புது அப்டேட்  – Kumudam

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ள நிலையில், கடந்த 19 நாட்களாக மலைக்குச் செல்ல மறுக்கப்பட்டிருந்த அனுமதி, இன்று (டிசம்பர் 22) முதல் அனைத்துத் தரப்பினருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சந்தனக்கூடு விழா மற்றும் கொடியேற்றம்

திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் உள்ள பள்ளிவாசல் மற்றும் மலையில் உள்ள தர்காவில் வருகிற ஜனவரி 6-ஆம் தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி, நேற்று (டிசம்பர் 21) இரவு 8.30 மணியளவில் பெரிய ரதவீதியில் உள்ள பள்ளிவாசலில் இருந்து மின்னொளியுடன் கூடிய அலங்கார வண்டியில் பிறை கொடி எடுத்து வைக்கப்பட்டது.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட அந்தக் கொடி, பெரிய ரதவீதி, கோட்டைத் தெரு வழியாக மலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, தர்காவில் அமைக்கப்பட்ட கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.

அனைவருக்கும் அனுமதி வழங்கிய காவல்துறை

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடந்த 19 நாட்களாகப் பொதுமக்களுக்கு மலைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

மலையில் உள்ள தர்காவில் நடக்கும் சந்தனக்கூடு விழாவிற்கு இஸ்லாமியர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிற்பகல் 12.30 மணி முதல் அனைத்துத் தரப்பினருக்கும் மலைக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்துத் தெரிவித்த காவல் உதவி ஆணையர் சசிபிரியா, பொதுமக்கள் அனைவரும் ஆதார் அட்டை மற்றும் செல்போன் எண்ணைக் கொடுத்துவிட்டுத் திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லலாம் என்று அறிவித்துள்ளார்.

Thank You

Related Posts

”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 1:17 PM IST மணிப்பூர் ஒரு அமைதியான மாநிலம். ஆனால் அமைதியாக இருந்த மணிப்பூரில் பாஜக கலவரத்தை ஏற்படுத்தி ஆயிரம் கணக்கான மக்கள் இறந்துள்ளனர் – ராகுல் காந்தி ராகுல் காந்தி மகளிர் உரிமைத் தொகை,…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5% அதிகரிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 7:56 AM IST தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட, குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 5 விழுக்காடு அதிகரித்துள்ளது. செய்தி18 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4,023 பேர் போட்டியிடும் நிலையில் 3,992 பேரின் பிரமாணப்பத்திரங்களை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

மங்காத்தா vs ஜனநாயகன் : பொங்கலுக்கு அஜித் திரைப்படம் ரீ-ரிலீஸ் : விஜய் உடன் மோத திட்டம் ? – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 6 views
மங்காத்தா vs ஜனநாயகன் : பொங்கலுக்கு அஜித் திரைப்படம் ரீ-ரிலீஸ் : விஜய் உடன் மோத திட்டம் ? – Kumudam

Latest CEH Exam Questions and Answers – Study Online for Certified Ethical Hacker – TN News

  • By admin
  • April 20, 2026
  • 8 views

”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 20, 2026
  • 16 views
”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 20, 2026
  • 18 views
Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 3 views
’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

  • By admin
  • April 20, 2026
  • 7 views
`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்
.site-info { display: none; }