வேட்பாளருக்கு புது நெருக்கடி:  8 நாள் இருந்தாலும் வேட்புமனுத் தாக்கலுக்கு 4 நாட்கள் மட்டும் தான் – Kumudam

தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்பட 5 மாநில தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. அந்த வகையில் தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட உள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், மார்ச் 30-ம் தேதி தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது. இதற்காக வேட்பாளர்கள் அறிவிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.  மார்ச் 30-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் அதிகாரப்பூர்வமாக தொடங்கும் நிலையில், இடையில் வரும் தொடர் விடுமுறை நாட்களால் வேட்பாளர்களுக்கு இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது.

மார்ச் 31 (தெலுங்கு வருடப்பிறப்பு), ஏப்ரல் 3 (புனித வெள்ளி), ஏப்ரல் 4 (சனிக்கிழமை) மற்றும் ஏப்ரல் 5 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நான்கு நாட்களும் பொது விடுமுறை என்பதால் அன்று மனுக்களை தாக்கல் செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மொத்தமுள்ள எட்டு நாட்களில் வெறும் நான்கு நாட்கள் மட்டுமே வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்ய முடியும். ஏப்ரல் 6-ஆம் தேதி மனுத்தாக்கல் செய்ய இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுருக்கமான கால அவகாசத்தை கருத்தில் கொண்டு, வேட்பாளர்கள் தங்களது ஆவணங்களை முன்கூட்டியே தயார் செய்து, நெரிசலை தவிர்க்கத் திட்டமிடுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Thank You

Related Posts

ஏங்க கொஞ்சம் நில்லுங்க… பனைமரத்தையா வெட்டப் போறீங்க! – Kumudam

ஏங்க கொஞ்சம் நில்லுங்க… பனைமரத்தையா வேட்டப் போறீங்க! – பருத்திச்சேரி ராஜா ’’ஒரு கிணற்றை சுற்றி பத்து பனை மரம் இருந்தால் கடைசிவரை அந்தக் கிணற்றில் தண்ணீர் வற்றாது.  பனைமரம் தண்ணீரை  வற்றவிடாது. அந்த பனை மரம் கழுத்து முறிந்து சாகிறதென்றால்…

தமிழக சட்டமன்ற தேர்தல்: 9 மணி நிலவரப்படி 17.69 சதவிகிதம் வாக்குபதிவு – Kumudam

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் உள்ள 75,064 வாக்குப்பதிவு மையங்களிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை இடைவிடாமல் நடைபெறுகிறது. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க மாநிலம் முழுவதும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ஏங்க கொஞ்சம் நில்லுங்க… பனைமரத்தையா வெட்டப் போறீங்க! – Kumudam

  • By admin
  • April 24, 2026
  • 5 views
ஏங்க கொஞ்சம் நில்லுங்க… பனைமரத்தையா வெட்டப் போறீங்க! – Kumudam

Ajith | தமிழகத்தின் முதல் ஓட்டு… 7 மணிக்கு முன்பாகவே வாக்களித்த நடிகர் அஜித்… காரணம் என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 24, 2026
  • 7 views
Ajith | தமிழகத்தின் முதல் ஓட்டு… 7 மணிக்கு முன்பாகவே வாக்களித்த நடிகர் அஜித்… காரணம் என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

வயர்லெஸ் சார்ஜிங்கைப் புரிந்துகொள்வது: இது எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அதன் நன்மைகள் – TN செய்திகள்

  • By admin
  • April 24, 2026
  • 8 views
வயர்லெஸ் சார்ஜிங்கைப் புரிந்துகொள்வது: இது எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அதன் நன்மைகள் – TN செய்திகள்

CSK: "இந்த அணிக்காக விளையாடுவதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்!"- ஆட்ட நாயகன் சஞ்சு சாம்சன்

  • By admin
  • April 24, 2026
  • 10 views
CSK: "இந்த அணிக்காக விளையாடுவதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்!"- ஆட்ட நாயகன் சஞ்சு சாம்சன்

Indian sports wrap, April 20: Suraj Chand wins PSA Challenger Tour event in Chennai

  • By admin
  • April 24, 2026
  • 12 views
Indian sports wrap, April 20: Suraj Chand wins PSA Challenger Tour event in Chennai

Summer Travel: பழங்கால இன்ஜினியரிங்கின் உச்சம்! உலகின் டாப் சுற்றுலாத் தலங்கள் இதோ.!

  • By admin
  • April 24, 2026
  • 11 views
Summer Travel: பழங்கால இன்ஜினியரிங்கின் உச்சம்! உலகின் டாப் சுற்றுலாத் தலங்கள் இதோ.!
.site-info { display: none; }