கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
Ajith | தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், முதல் ஆளாக நடிகர் அஜித் குமார் திருவான்மியூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், முதல் ஆளாக நடிகர் அஜித் குமார் திருவான்மியூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என ஐந்து முனை போட்டி நிலவுகிறது. மொத்தமாக 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் பெண் வேட்பாளர்கள் – 2.93 கோடி, ஆண் வேட்பாளர் – 2.80 கோடி, மாற்று பாலினத்தவர் – 7,728 பேர் என உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.
வாக்காளர் அட்டை தவிர்த்து, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, MNREGA அடையாள அட்டை, பாஸ்போர்ட், வங்கி/ அஞ்சல் அலுவலக கணக்குப் புத்தகம், ஓய்வூதிய அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை, ஒன்றிய/ மாநில அரசுகள் PSU நிறுவன அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், எம்.பி/ எம்.எல்.ஏ அடையாள அட்டை, பான் கார்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை ஆகிய 12 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம். ஆனால், சமீபத்திய வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தான் நடிகர் அஜித் குமார் திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்தார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 15 நிமிடங்களே இருந்த நிலையில் வெள்ளைநிற கோட் அணிந்து அஜித் வாக்குச்சாவடிக்கு வந்தார். அவரைப் பார்க்க காலை 6 மணி முதல் ரசிகர்கள் கூடியிருந்ததால் கூட்ட நெரிசலுக்கு மத்தியில் அவரை காவலர்கள் வாக்குச்சாவடிக்குள் அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து கூடியிருந்த கூட்டம் பாதுகாப்பை மீறி வாக்குச்சாவடி மையத்திற்குள் புகுந்து அஜித் குறித்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து தமிழகத்தில் தேர்தல் தொடங்குவதற்கு முன்பாக அதாவது 7 மணிக்கு முன்னதாகவே அஜித் வாக்களித்தார். திருவான்மியூர் வாக்குச்சாவடியில் அவரை பார்க்க கூடியிருந்த ரசிகர்களால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில் தான் முதல் ஆளாக தேர்தல் தொடங்க 6 நிமிடங்கள் முன்னதாகவே அஜித் வாக்களித்துவிட்டுச் சென்றார். இதனால் அஜித்தின் வாக்கு காலை 6.54 மணிக்கு பதிவான தமிழ்நாட்டின் முதல் வாக்கானது. இதன்மூலம் தமிழகத்தில் முதல் ஆளாக அஜித் வாக்களித்துவிட்டு வீடு திரும்பினார். இதேபோல் நடிகர் சுந்தர்.சி மற்றும் குஷ்பூ ஆகியோரும் முதல் ஆளாக வரிசையில் நின்று வாக்களித்தனர். மந்தைவெளி வாக்குச்சாவடியில் அவர்கள் வாக்களித்தனர்.
சென்னை (மெட்ராஸ்), சென்னை, தமிழ்நாடு