CSK: "இந்த அணிக்காக விளையாடுவதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்!"- ஆட்ட நாயகன் சஞ்சு சாம்சன்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்.23) ஆட்டத்தில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதின.

இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சனின் அதிரடி சதத்தால், மும்பை அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு பேசிய சஞ்சு சாம்சன், ” வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்தது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது.

csk
csk

இது எனக்கும், எனது அணிக்கும் சிறந்த தருணம். ஆடுகளத்தின் தன்மையை மட்டுமே கவனித்து விளையாடுகிறேன். நாங்கள் இடைவிடாமல் விக்கெட்டுகளை இழந்துகொண்டே இருந்தோம்.

எப்போதெல்லாம் அதிரடியாக ஆட நினைத்தோமோ, அப்போதெல்லாம் விக்கெட்டுகளை இழந்தோம். எனவே, நிலைத்து நின்று ஆடும் ஒரு பேட்ஸ்மேன் கடைசி வரை இருப்பது மிகவும் முக்கியம் என்று நினைத்தேன்.

அதை நான் முயற்சித்தேன். ஆட்டமே மைதானத்தில் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லும். நீங்கள் ஒரு முன்முடிவோடு வர வேண்டிய அவசியமில்லை.

எனது அனுபவத்தின்படி, எப்போதும் அணிதான் எனக்கு முதன்மையானது. ‘நான் இப்படித்தான் ஆடுவேன், அவுட் ஆனாலும் கவலை இல்லை’ என்று சொல்லலாம்.

ஆனால், என் மீது வைக்கப்பட்டுள்ள பொறுப்பு மற்றும் அனுபவத்தின் காரணமாக, ஆட்டத்தின் சூழ்நிலையையும் அணியின் தேவையையும் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றவாறு எனது ஆட்டத்தை திட்டமிடுவது எனது கடமை.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

இந்த வெற்றியின் மூலம் கிடைத்துள்ள உத்வேகத்துடன் நாங்கள் தொடர்ந்து முன்னேற விரும்புகிறோம். ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது என்பது எங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு அணியும் மிகுந்த தீவிரத்துடன் விளையாடும்.

எனவே நாம் அதற்குத் தயாராக இருக்க வேண்டும், இந்தத் தருணத்தை ரசித்து விளையாட வேண்டும். நான் முதல்முறையாக மஞ்சள் நிற சீருடை அணிந்துள்ளேன். இது எனக்கு மிகவும் புதிய அனுபவம்.

வான்கடே மைதானத்தில் என் வாழ்நாளில் இவ்வளவு மஞ்சள் நிறத்தை நான் பார்த்ததே இல்லை. இந்த அணிக்காக விளையாடுவதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

Thank You

Related Posts

வாக்கு வேட்டையில் ‘மீன்’: மம்தா vs பாஜக – மல்லுக்கட்டும் வங்காளத் தேர்தல் களம்!| ‘Fish’ in the Vote Hunt: Mamata vs. BJP — The Bengal Election Arena Locks Horns!

இப்படி மாறி மாறி இருகட்சிகளும் தங்களை கலாச்சாரக் காவலர்களாக முன்னிறுத்துவதோடு, தேர்தல் பிரசாரங்களில் மீன்களையும் உடன் எடுத்துச் செல்கின்றனர். அப்படி வங்காளத்துக்கும் மீனுக்கும் என்னதான் தொடர்பு? வங்காளத்தில் மீன் என்பது வெறும் உணவல்ல. அது அந்தப் பகுதி மக்களின் வாழ்வியல் அடையாளம்.…

மதுரை சித்திரை திருவிழா: அம்பாள் பூதம் மற்றும் அன்ன வாகனத்தில் வீதியுல | Photo Album

அம்பாள் பூதம் அன்னவாகனத்தில் வீதியுல அம்பாள் பூதம் அன்னவாகனத்தில் வீதியுல அம்பாள் பூதம் அன்னவாகனத்தில் வீதியுல அம்பாள் பூதம் அன்னவாகனத்தில் வீதியுல அம்பாள் பூதம் அன்னவாகனத்தில் வீதியுல அம்பாள் பூதம் அன்னவாகனத்தில் வீதியுல அம்பாள் பூதம் அன்னவாகனத்தில் வீதியுல அம்பாள் பூதம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ஏங்க கொஞ்சம் நில்லுங்க… பனைமரத்தையா வெட்டப் போறீங்க! – Kumudam

  • By admin
  • April 24, 2026
  • 5 views
ஏங்க கொஞ்சம் நில்லுங்க… பனைமரத்தையா வெட்டப் போறீங்க! – Kumudam

Ajith | தமிழகத்தின் முதல் ஓட்டு… 7 மணிக்கு முன்பாகவே வாக்களித்த நடிகர் அஜித்… காரணம் என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 24, 2026
  • 6 views
Ajith | தமிழகத்தின் முதல் ஓட்டு… 7 மணிக்கு முன்பாகவே வாக்களித்த நடிகர் அஜித்… காரணம் என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

வயர்லெஸ் சார்ஜிங்கைப் புரிந்துகொள்வது: இது எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அதன் நன்மைகள் – TN செய்திகள்

  • By admin
  • April 24, 2026
  • 7 views
வயர்லெஸ் சார்ஜிங்கைப் புரிந்துகொள்வது: இது எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அதன் நன்மைகள் – TN செய்திகள்

CSK: "இந்த அணிக்காக விளையாடுவதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்!"- ஆட்ட நாயகன் சஞ்சு சாம்சன்

  • By admin
  • April 24, 2026
  • 10 views
CSK: "இந்த அணிக்காக விளையாடுவதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்!"- ஆட்ட நாயகன் சஞ்சு சாம்சன்

Indian sports wrap, April 20: Suraj Chand wins PSA Challenger Tour event in Chennai

  • By admin
  • April 24, 2026
  • 12 views
Indian sports wrap, April 20: Suraj Chand wins PSA Challenger Tour event in Chennai

Summer Travel: பழங்கால இன்ஜினியரிங்கின் உச்சம்! உலகின் டாப் சுற்றுலாத் தலங்கள் இதோ.!

  • By admin
  • April 24, 2026
  • 10 views
Summer Travel: பழங்கால இன்ஜினியரிங்கின் உச்சம்! உலகின் டாப் சுற்றுலாத் தலங்கள் இதோ.!
.site-info { display: none; }