நீலிரா: "குறைந்த திரைகளே கிடைத்தது; உயிர்த்தெழச் செய்ய உங்களால் முடியும்!" – கார்த்திக் சுப்புராஜ்


போருக்கு எதிரான அழுத்தமான படைப்பாக வெளிவந்திருக்கும் ‘நீளிரா’ திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

ஈழ இயக்குநர் சோமிதரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ஈழ தமிழ் படைப்பை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் அதற்கு நேர்மறையான விமர்சனங்களைத் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் படத்திற்கு குறைவான திரைகளே தொடக்கத்தில் கிடைத்ததாகவும், பார்வையாளர்கள் படத்திற்கு ஆதரவு கொடுக்கும்படி இப்படத்தின் தயாரிப்பாளரான கார்த்திக் சுப்புராஜ் பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார்.

நீளிரா படத்தில்...
நீளிரா படத்தில்…

அந்தப் பதிவில், “‘நீளிரா’ திரைப்படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியானது. வெளியான நாளிலிருந்தே இந்த படம், இதைக் கண்டு களித்த ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் மிகவும் அபாரமான வரவேற்பைப் பெற்றுள்ளது.

சோமிதரன் என்கிற ஈழத்து படைப்பாளியின் முதல் படமான நீளிரா, இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக உருவாகியுள்ள ஈழத் தமிழ் திரைப்படம் என்பதால், இதை ஒரு மெயின்ஸ்ட்ரீம் திரையரங்கு வெளியீடாக கொண்டு வர பல சவால்களை எதிர்கொண்டோம்.

அந்த சவால்களை கடந்து நாங்கள் அதை சாதித்துள்ளோம். உணர்வு ரீதியாக எங்களுக்கு இது மிகப்பெரிய வெற்றி படம். கோடிக்கோடியாக லாபம் வரும் என்ற நோக்கத்துடன் இந்த படத்தை நாங்கள் தயாரிக்கவில்லை.

ஈழத்து போரை சார்ந்த உண்மையான கதைகளையும், படைப்புகளையும், படைப்பாளிகளையும் உலக சினிமா அரங்குகளில் அவர்களின் குரல் கேட்கும் வகையில் ஒரு இடம் உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

இது ஒரு தொடக்கம். A great start for a film movement! ஆனால் இந்த தொடக்கம் வளர்ந்து, இனி வரும் காலங்களில் இதைப் போன்ற கதைகளும் படைப்பாளிகளும் சினிமாவிற்கு வர வேண்டும் என்றால், வியாபார ரீதியாக திரையரங்குகளுக்கு ஒரு சிறிய நம்பிக்கையை கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

தொடக்கத்தில் குறைந்த திரைகளில்தான் வெளியிட்டோம். குறைந்த திரைகளே கிடைத்தது. புனித வெள்ளியில் தொடங்கி, வாய்மொழி பாராட்டு (Word of Mouth) பரவி, மேலும் பலரும் திரையரங்குகளுக்கு வந்து, ஞாயிற்றுக்கிழமை Easter நாளில் மக்கள் ஆதரவால் எங்கள் படம் உயிர்த்தெழும் என்று உறுதியாக நம்பினோம்.

ஆனால் ஈழத் தமிழ் சினிமாவுக்கான Easter இன்னும் வரவில்லை. ஈழத் தமிழ் சினிமாவுக்கான Easter இன்னும் வரவில்லை… பல வருடங்களாக சிலுவையில் அறையப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் சினிமாவை உயிர்த்தெழச் செய்ய உங்களால் மட்டுமே முடியும்.

தயவுசெய்து எங்கள் திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று பாருங்கள். அது உங்கள் நேரத்திற்கும் பணத்திற்கும் நிச்சயமாக மதிப்புடையதாக இருக்கும். குறிப்பு: இந்த படத்திற்கான OTT ஒப்பந்தம் இன்னும் முடிவாகவில்லை.

எனவே சில வாரங்களில் OTT-யில் பார்க்கலாம் என்று நினைக்க வேண்டாம். சினிமாவின் உயிர்த்தெழுதல் திரையரங்குகளில்தான் நிகழும்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.





Thank You

Related Posts

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 16, 2026 1:34 PM IST விளம்பரங்கள், தயாரிப்பு உறைகள் மற்றும் இணையதளங்களில் அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை தமன்னா வழக்கு தொடர்ந்திருந்தார். செய்தி18 பவர் சோப் நிறுவனத்திற்கு எதிராக நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு…

ஜகமே தந்திரம் | டிரெய்லர் | தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி | கார்த்திக் சுப்பராஜ் நெட்ஃபிக்ஸ் இந்தியா – அஹதமிழ்

தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. Music – Santhosh Narayanan DOP – Shreyaas Krishna Art Directors – T. Santanam, Vinoth Rajkumar (UK) Editor –…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

  • By admin
  • April 19, 2026
  • 3 views
லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 19, 2026
  • 9 views
திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 19, 2026
  • 9 views
நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 16 views
மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

  • By admin
  • April 19, 2026
  • 15 views
அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 12 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam
.site-info { display: none; }