கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பூதேரி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான நபர், சம்பவத்தன்று தலைக்கேறிய மது போதையில் திடீரென்று சாலையில் இறங்கி, அட்ராசிட்டியில் ஈடுபட்டார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூலிப்பதாக கூறி அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்து, ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனர். அரசுப் பேருந்தை வழிமறித்து அட்ராசிட்டியில் ஈடுபட்டவருக்கு, போலீசார் புகட்டிய பாடம் என்ன?
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பூதேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரகு. கூலித் தொழிலாளியான இவர், சம்பவத்தன்று தலைக்கேறிய மது போதையில் திடீரென்று சாலையில் இறங்கி, அட்ராசிட்டியில் ஈடுபட்டார். டாஸ்மாக்கில் மது அருந்திய தன்னிடம்… பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கியது ஏன்? என சத்தம் போட்டு, அலப்பறை செய்துள்ளார்.
அப்போது கூட்டேரிப்பட்டு பகுதியிலிருந்து திண்டிவனம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை வழிமறித்து, கல்லால் பேருந்தின் கண்ணாடியை உடைத்து அதீத மது போதையில் ரவுடியிசம் செய்துள்ளார். கண்ணாடிகள் உடைந்து தெறிக்க, உள்ளே அமர்ந்திருந்த பயணிகள் அச்சப்பட்டு தலைதெறிக்கக் கீழிறங்கி ஓடினர். ஒவ்வொருவராக கீழிறங்கி உயிர்ச்சேதம் ஏற்படாமல் தப்பிக்க, ரகு தனது வெறிச்செயலைத் தொடர்ந்து அரங்கேற்றி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை தட்டிக்கேட்ட பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரையும் தாக்க முயன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.