– விளம்பரம் –
சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மட்டுமின்றி ஐ.பி.எல் போட்டிகளிலும் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக பார்க்கப்பட்ட வரும் ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் சீசன் இதுவரை சிறப்பாக அமையவில்லை. ஏனெனில் இதுவரை நடைபெற்றுள்ள 5 போட்டிகளில் மொத்தமாக 19 ஓவர்களை வீசியுள்ள அவர் இந்த 114 பந்துகளில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. அதேபோன்று அவரது பந்துவீச்சில் அதிகளவு ரன்களும் கசிந்து வருகின்றன.
பும்ராவின் பவுலிங் பார்ம் குறித்து பேசிய மஹேலா ஜெயவர்த்தனே :
இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்து வந்த ஜஸ்ப்ரீத் பும்ராவின் பௌலிங் ஃபார்ம் இந்த ஐபிஎல் தொடரின் முதல் ஐந்து போட்டிகளில் மோசமாக இருந்து வருவது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.
– விளம்பரம் –
ஏற்கனவே தொடர்ச்சியாக நான்கு தோல்விகளை சந்தித்துள்ள மும்பை அணி இனிவரும் போட்டிகளில் வெற்றிபெற வேண்டுமெனில் ஜஸ்ப்ரீத் பும்ராவின் பௌலிங் ஃபார்ம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக எப்போது மீண்டும் அவர் சிறப்பாக பந்துவீச துவங்கப்போகிறார்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஜஸ்ப்ரீத் பும்ராவின் பவுலிங் பார்ம் குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு தற்போது அந்த அணியின் பயிற்சியாளரான மஹேலா ஜெயவர்த்தனே பதிலடி கொடுத்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : ஜஸ்ப்ரீத் பும்ரா மிகச் சிறப்பாக பந்துவீசி வருகிறார். அவர் பார்ம் இழந்துவிட்டதாக கூறுவதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். ஏனெனில் பிரச்சனை அவரிடம் இல்லை.
– விளம்பரம் –
இதையும் படிங்க : ஐ.பி.எல் போட்டிகளில் இதுவரை யாரும் செய்யாத மோசமான சாதனையை நிகழ்த்திய – தீபக் சாஹர்
மற்ற பந்துவீச்சாளர்கள் பவர்பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்தி அழுத்தம் கொடுக்க தவறுவதால் எதிரணியின் பேட்ஸ்மேன்கள் பும்ரா ஓவரில் ரிஸ்க் எடுக்காமல் விடுகிறார்கள். எங்கள் அணியில் தற்போது பந்துவீச்சு துறை ஒரு யூனிட்டாக செயல்படவில்லை. மற்ற பந்துவீச்சாளர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து சிறப்பாக செயல்பட்டால் பும்ராவிற்கு அது உத்வேகத்தை தரும். ஒருமுறை பும்ரா விக்கெட் எடுக்க துவங்கி விட்டால் அவரை தடுத்து நிறுத்துவது கடினம் என்றும் ஜெயவர்த்தனே கூறியது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்