– விளம்பரம் –
நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 14-வது லீக் போட்டியில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி திரில் வெற்றியை ருசித்திருந்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியின் போது முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை குவித்தது.
2 ஆவது வீரராக ஜாஸ் பட்லர் நிகழ்த்திய சாதனை :
பின்னர் 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது இறுதிவரை போராடி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் குவிக்க ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் அணி அசத்தலான வெற்றியை பெற்றிருந்தது. இந்த போட்டியின் போது டெல்லி அணி சார்பாக விளையாடிய துவக்க வீரர் கே.எல் ராகுல் 92 ரன்களையும், டேவிட் மில்லர் மற்றும் நிசங்கா ஆகியோர் தலா 41 ரன்களையும் குவித்து அசத்தினர்.
– விளம்பரம் –
இந்த போட்டியின் போது குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பாக மூன்றாவது வீரராக களமிறங்கி விளையாடிய ஜாஸ் பட்லர் 27 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர் என 52 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் ஜாஸ் பட்லர் ஐ.பி.எல் போட்டிகளில் சுரேஷ் ரெய்னாவிற்கு அடுத்து இரண்டாவது வீரராக ஒரு தனித்துவமான சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.
அந்த வகையில் ஜாஸ் பட்லர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்த போட்டியின் போது முதல் விக்கெட்டாக சாய் சுதர்சன் 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதும் மூன்றாவது ஓவரில் பேட்டிங் செய்ய வந்த ஜாஸ் பட்லர் பவர்பிளே ஓவர்களுக்குள் 5 சிக்ஸர்களை விளாசினார். இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் துவக்க வீரர் அல்லாத ஒரு வீரர் பவர்பிளே ஓவர்களுக்குள் 5 சிக்ஸர்களை விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : 9 ஆண்டுகளில் இதுவே முதல்முறை.. தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ
ஏற்கனவே கடந்த 2014-ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரான சுரேஷ் ரெய்னா பவர்பிளே ஓவர்களுக்குள் 6 சிக்ஸர்களை விளாசியிருந்த வேளையில் அவருக்கு அடுத்து தற்போது 5 சிக்ஸர்களை விளாசி இரண்டாவது இடத்தினை ஜாஸ் பட்லர் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்