அடுத்த போட்டியில் தோனி விளையாட மாட்டார்.. ஆனா மற்றொரு முக்கிய வீரர் விளையாடுவார்

எம்.எஸ்.தோனி மற்றும் சி.எஸ்.கே

– விளம்பரம் –

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது. இதன் காரணமாக 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக பல்வேறு இளம் வீரர்களை விலைக்கு வாங்கியிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இம்முறை நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் தொடரில் தங்களது வலுவான கம்பேக்கை வழங்கும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அடுத்த போட்டிக்கான சி.எஸ்.கே அணிக்கு திரும்பும் நட்சத்திர வீரர் :

ஆனால் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் விளையாடி முடித்துள்ள சென்னை அணியானது மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து மீண்டும் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. சென்னை அணியில் நட்சத்திர வீரர்களான மகேந்திர சிங் தோனி, பிரேவிஸ் மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் காயம் காரணமாக விளையாடாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

– விளம்பரம் –

இதன் காரணமாக அவர்களது கம்பேக் எப்போது இருக்கும்? என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இவ்வேளையில் இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகளை தவறவிட்ட மகேந்திர சிங் தோனி ஏப்ரல் 11-ஆம் தேதி நடைபெற இருக்கும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவலின் படி : அவரது காயத்தில் இன்னும் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று என்பதனால் அவர் சிஎஸ்கே அணியுடன் பயணிக்காமல் இருந்து வருகிறார். இதன் காரணமாக நிச்சயம் மேலும் ஒரு வாரம் அவர் அணியில் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய சி.எஸ்.கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில் : தோனி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அதற்கு சில காலம் ஆகும். எவ்வளவு நாட்கள் என கூற முடியாது.

– விளம்பரம் –

இதையும் படிங்க : பும்ராவுக்கு எதிரா முதல் பந்திலேயே சிக்ஸ் அடிக்க இதுவே காரணம் – வைபவ் சூர்யவன்ஷி பகிர்வு

அதேபோன்று டேவால்டு பிரேவிஸ் அடுத்த போட்டிக்கு வர வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் அவருடைய உடற்தகுதியை பொறுத்தே அவருடைய தேர்வு அமையும். அடுத்த போட்டிக்கு இன்னும் சில நாட்கள் இருக்கின்றன என காசி விஸ்வநாதன் தெரிவித்தார். இதன் காரணமாக தோனி அடுத்து போட்டியில் விளையாட மாட்டார் என்றும் பிரேவிஸ் விளையாட அதிக வாய்ப்புள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

Thank You

Related Posts

ரூ.1.20 லட்சம் மானியம்.. அள்ளிக்கொடுக்கும் அரசு.. குஷியில் துள்ளி குதிக்கும் விவசாயிகள்!

தமிழக அரசு, வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு களை எடுக்கும் இயந்திரம் வாங்க மானியம் வழங்குகிறது. 70 சதவீதம் வரை அல்லது அதிகபட்சமாக ரூ.1.20 லட்சம் வரை இந்த மானியம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய மற்றும்…

Rajinikanth: கே.பாலச்சந்தரை கட்டிப்பிடித்து கதறிய ரஜினிகாந்த்.! சூப்பர் ஸ்டாரே கண்ணீர் விட்ட கதை தெரியுமா?

“சூப்பர் ஸ்டார்” ரஜினி உலகம் கொண்டாடும் மனிதனின் பின்னால், உணர்ச்சிகள் நிறைந்த ஒரு சாதாரண மனிதன் இருக்கிறார். அந்த மனிதனை உருவாக்கியவர் K. Balachander. அவரை கட்டிப்பிடித்து ரஜினி கதறிய சம்பவம், புகழின் பின்னாலான உண்மையை வெளிப்படுத்துகிறது. தமிழ் சினிமாவில் “சூப்பர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ரூ.1.20 லட்சம் மானியம்.. அள்ளிக்கொடுக்கும் அரசு.. குஷியில் துள்ளி குதிக்கும் விவசாயிகள்!

  • By admin
  • April 17, 2026
  • 10 views
ரூ.1.20 லட்சம் மானியம்.. அள்ளிக்கொடுக்கும் அரசு.. குஷியில் துள்ளி குதிக்கும் விவசாயிகள்!

அமித் ஷாவின் 50% ஃபார்முலா: தமிழகத்திற்கு சாதகமா? பாதகமா? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 17, 2026
  • 9 views
அமித் ஷாவின் 50% ஃபார்முலா: தமிழகத்திற்கு சாதகமா? பாதகமா? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Rajinikanth: கே.பாலச்சந்தரை கட்டிப்பிடித்து கதறிய ரஜினிகாந்த்.! சூப்பர் ஸ்டாரே கண்ணீர் விட்ட கதை தெரியுமா?

  • By admin
  • April 17, 2026
  • 6 views
Rajinikanth: கே.பாலச்சந்தரை கட்டிப்பிடித்து கதறிய ரஜினிகாந்த்.! சூப்பர் ஸ்டாரே கண்ணீர் விட்ட கதை தெரியுமா?

”’Joe’ படத்துல பண்ணின தவறுகளை இதுல திருத்திக்கணும்!"- ஜி.வி உடன் இணையும் ‘ஜோ’ பட இயக்குநரின் பேட்டி

  • By admin
  • April 17, 2026
  • 6 views
”’Joe’ படத்துல பண்ணின தவறுகளை இதுல திருத்திக்கணும்!"- ஜி.வி உடன் இணையும் ‘ஜோ’ பட இயக்குநரின் பேட்டி

மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூரம்: பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் மூழ்கடித்த குடும்பம்! – Kumudam

  • By admin
  • April 17, 2026
  • 11 views
மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூரம்: பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் மூழ்கடித்த குடும்பம்! – Kumudam

கனமழை எச்சரிக்கை : மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு  – Kumudam

  • By admin
  • April 17, 2026
  • 10 views
கனமழை எச்சரிக்கை : மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு  – Kumudam
.site-info { display: none; }