IND vs CHN Highlights: கடைசி வரை பரபரப்பு… சீனாவை வீழ்த்திய இந்தியா – 5வது முறையாக ஆசிய சாம்பியன்!



IND vs CHN லைவ் ஸ்கோர், ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி இறுதிப் போட்டி: 8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் நேற்று நடந்த அரையிறுதியில் நடப்பு சாம்பியனான இந்தியா தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 5-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

ஆங்கிலத்தில் படிக்கவும்: இந்தியா vs சீனா லைவ் ஸ்கோர், ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024 ஹாக்கி இறுதிப் போட்டி

மற்றொரு அரையிறுதியில், பாகிஸ்தானை சீனா எதிர்கொண்ட  நிலையில், ஆட்ட நேர முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இதையடுத்து முடிவை அறிய பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில், சீனா 2-0 என்ற கணக்கில் மூன்று முறை சாம்பியனான பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்து முதல்முறையாக இறுதிப் போட்டிக்குள் கால்பதித்தது.

இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, சீனாவுடன் மோதியது. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் இந்திய அணி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தியது. இந்திய அணியின் ஜுக்ராஜ் சிங் ஆட்டத்தின் 50 நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து பதில் கோல் அடிக்க சீனா கடுமமையாக போராடியது. ஆனால், அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இறுதியில், ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி 5-வது முறையாக ஆசிய ஹாக்கி சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 





Thank You

Related Posts

அர்ஜென்டினாவில் நடந்த 4 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி

இந்திய மகளிர் ஹாக்கி அணி தனது நான்கு போட்டிகள் கொண்ட அர்ஜென்டினா சுற்றுப்பயணத்தை வெள்ளிக்கிழமை 2-2 என்ற கணக்கில் டிராவில் முடித்தது. தொடரின் கடினமான தொடக்கத்திற்குப் பிறகு, இந்திய அணி மீண்டும் போராடி, சுற்றுப்பயணத்தை உயர்நிலையில் முடிக்க அதன் இறுதி இரண்டு…

ஆசிய கோப்பை ஹாக்கி; தென்கொரியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேற்றம்

India vs South Korea Hockey Asian Championship 2023: ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா மற்றும் தென் கொரியா அணிகள் திங்கட்கிழமை மோதின. திங்கள்கிழமை சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

  • By admin
  • April 19, 2026
  • 15 views
அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 6 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

ஜகமே தந்திரம் | டிரெய்லர் | தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி | கார்த்திக் சுப்பராஜ் நெட்ஃபிக்ஸ் இந்தியா – அஹதமிழ்

  • By admin
  • April 19, 2026
  • 8 views
ஜகமே தந்திரம் | டிரெய்லர் | தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி | கார்த்திக் சுப்பராஜ் நெட்ஃபிக்ஸ் இந்தியா – அஹதமிழ்

Latest Cisco 350-401 ENCOR Exam Questions and Answers – Study Online Today – TN News

  • By admin
  • April 19, 2026
  • 9 views

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 10 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 7 views
தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam
.site-info { display: none; }