ஆசிய கோப்பை ஹாக்கி; தென்கொரியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேற்றம்


India vs South Korea Hockey Asian Championship 2023: ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா மற்றும் தென் கொரியா அணிகள் திங்கட்கிழமை மோதின.

திங்கள்கிழமை சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 இன் நான்காவது ரவுண்ட் ராபின் போட்டியில் இந்தியா தென் கொரியாவை எதிர்கொள்கிறது.

இதையும் படியுங்கள்: ஆசிய கோப்பை ஹாக்கி; 5-0 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

மலேசியாவுக்கு எதிராக 5-0 என்ற கணக்கில் மகத்தான வெற்றியைப் பெற்ற பிறகு, இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. முன்னதாக போட்டியின் தொடக்க ஆட்டத்தில் சீனாவை 7-2 என்ற கோல் கணக்கில் வென்ற பிறகு, இந்தியா அணி பலம் வாய்ந்த ஜப்பானிடம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. தற்போது மற்றொரு வெற்றியின் மூலம் தங்கள் நிலையை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் இந்திய அணி உள்ளது.

இதற்கிடையில், தென் கொரியா ஐந்து புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது, மேலும் ஒரு வெற்றி மற்றும் இரண்டு டிராவுடன் இதுவரை தோல்வி அடையாத அணியாக உள்ளது. இதேபோல், இந்தியாவும் தோல்வி அடையாத அணியாக உள்ளது, இந்திய அணி இரண்டு வெற்றிகள் மற்றும் ஒரு டிராவைப் பெற்றுள்ளது.

இரு அணி வீரர்கள் விவரம்

இந்தியா: வருண் குமார், ஜர்மன்ப்ரீத் சிங், மன்பிரீத் சிங், ஹர்திக் சிங், மன்தீப் சிங், கிரிஷன் பகதூர் பதக் (கோல் கீப்பர்), ஹர்மன்ப்ரீத் சிங், சுமித், ஷம்ஷேர் சிங், ஆகாஷ்தீப் சிங், குர்ஜந்த் சிங்

தென்கொரியா: ஜேஹியோன் கிம், மஞ்சே ஜங், ஜங்ஜுன் லீ, வூ சியோன் ஜி, சியோலியோன் பார்க், ஹைஸுங் லீ, சுங்யுன் கிம், சியுங்ஹூன் லீ, ஹியோங்ஜின் கிம், ஜோங்குன் ஜாங் (கோல் கீப்பர்), லீ ஜூயோங்

இந்தபோட்டியில், ஆட்டத்தின் 6 ஆவது நிமிடத்தில் இந்திய அணி கோல் அடித்தது. சுகஜீத் கொடுத்த பந்தை நீலகண்டா சிறப்பாக கோல் ஆக்கினார். 12 ஆவது நிமிடத்தில் இதற்கு பதிலடியாக தென்கொரியா கோல் அடித்தது. பின்னர் ஆட்டத்தின் 23 ஆவது நிமிடத்தில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கோல் அடித்து, அணியை முன்னிலை பெறச் செய்தார்.

பின்னர் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் இந்தியா இன்னொரு கோல் அடித்தது. 33 ஆவது நிமிடத்தில் மந்தீப் கோல் அடித்தார். அடுத்த 25 நிமிடங்கள் இரு அணிகளும் கோல் அடிக்க முடியாமல் திணறின. ஆட்டத்தின் 58 ஆவது நிமிடத்தில் தென் கொரியா தனது 2 ஆவது கோலை அடித்தது. அதன் பின்னர் ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால், இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



Thank You

Related Posts

அர்ஜென்டினாவில் நடந்த 4 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி

இந்திய மகளிர் ஹாக்கி அணி தனது நான்கு போட்டிகள் கொண்ட அர்ஜென்டினா சுற்றுப்பயணத்தை வெள்ளிக்கிழமை 2-2 என்ற கணக்கில் டிராவில் முடித்தது. தொடரின் கடினமான தொடக்கத்திற்குப் பிறகு, இந்திய அணி மீண்டும் போராடி, சுற்றுப்பயணத்தை உயர்நிலையில் முடிக்க அதன் இறுதி இரண்டு…

ஹாக்கி ‘எல் கிளாசிகோ’… இந்தியா – பாக்,. போட்டியை நேரில் காணும் ஸ்டாலின்!

IND vs PAK, ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 தமிழ் செய்திகள்: 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 10 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 7 views
தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam

40 நாள் ஈரான் போருக்கு  $17.5 பில்லியன் (ரூ.1.6 லட்சம் கோடி) வீண் விரயம் செய்த இஸ்ரேல் – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 9 views
40 நாள் ஈரான் போருக்கு  $17.5 பில்லியன் (ரூ.1.6 லட்சம் கோடி) வீண் விரயம் செய்த இஸ்ரேல் – Kumudam

அர்ஜென்டினாவில் நடந்த 4 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி

  • By admin
  • April 19, 2026
  • 8 views
அர்ஜென்டினாவில் நடந்த 4 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி

சி.எஸ்.கே-வின் போராட்டம் வீண்… பவுலிங்கிலும் கலக்கிய ஐதராபாத் அசத்தல் வெற்றி

  • By admin
  • April 19, 2026
  • 7 views
சி.எஸ்.கே-வின் போராட்டம் வீண்… பவுலிங்கிலும் கலக்கிய ஐதராபாத் அசத்தல் வெற்றி

ஐபிஎல் 2026ல் ரிங்கு சிங்கின் மோசமான ஆட்டத்திற்கு 3 முக்கிய காரணங்கள்

  • By admin
  • April 19, 2026
  • 6 views
ஐபிஎல் 2026ல் ரிங்கு சிங்கின் மோசமான ஆட்டத்திற்கு 3 முக்கிய காரணங்கள்
.site-info { display: none; }