கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றத்தை முன்னிட்டு, கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் தங்கியுள்ள இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள வட்டக்கானல் பகுதியில், டிசம்பர் முதல் மார்ச் மாதங்கள் வரை இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை புரிந்து தங்கி செல்லுவது வழக்கமாக உள்ளது. அங்கு நிலவும் குளுமையான மற்றும் இதமான காலநிலையை அனுபவிப்பதுடன், சிலர் குழுவாக பிரார்த்தனை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டில் வட்டக்கானல் பகுதிக்கு வருகை தரும் இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஈரான் – இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நிலவும் போர் பதற்றத்தை முன்னிட்டு, வட்டக்கானல் பகுதியில் தங்கியுள்ள 40-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மேலும், வட்டக்கானல் பகுதிக்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனை செய்யப்பட்ட பிறகே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. போலீசார் முழுமையான பாதுகாப்பு வளையம் அமைத்து வட்டக்கானல் பகுதியை கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 09, 2026 10:29 AM IST