”அமெரிக்காவே மிரட்டினாலும் முதல்வர் ஸ்டாலின் பணிய மாட்டார்” டிடிவி தினகரன் விமர்சனத்திற்கு ஓபிஎஸ் பதில் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

அமெரிக்காவே மிரட்டினாலும் முதல்வர் ஸ்டாலின் பணிய மாட்டார் என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் - ஓ.பன்னீர்செல்வம்
முதல்வர் ஸ்டாலின் – ஓ.பன்னீர்செல்வம்

முதலமைச்சர் ஸ்டாலினிக்கு யாராலும் அழுத்தம் கொடுக்க முடியாது அமெரிக்காவே மிரட்டினாலும் அவர் பணிய மாட்டார் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் “தமிழ்நாடு தலை குனியாது” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது டெல்லி என்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுவார் என்ற டிடிவி தினகரன் தெரிவித்த கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், டெல்லி சென்றாலே தமிழக முதல்வர் பயப்படுவார் என்று கூறுவது முற்றிலும் தவறு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு யாராலும் அழுத்தம் கொடுக்க முடியாது. அமெரிக்காவே மிரட்டினாலும் அவர் பணிய மாட்டார். தமிழ்நாடு என்றைக்கும் தலை குனியாது,” என்றார்.

மேலும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அரசு அதிகாரிகள் திமுக கட்டுப்பாட்டில் செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டை மறுத்த அவர், “தமிழக அரசு மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துகிறது என்பதை மக்கள் நன்றாக அறிந்துள்ளனர்,” என்று தெரிவித்தார்.

அதேபோல் ஆதவ் முன்வைத்த “பண்ணையார் ஆட்சி” குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், ஆதவ் அர்ஜுனா என்ன தொழில் செய்கிறார் என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும். யார் பண்ணையார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்,” என்று பதிலடி கொடுத்தார்.

இதற்கிடையில், தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்தவர்கள் கட்சியை விட்டு வெளியேறியதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காமல் மௌனமாக அங்கிருந்து சென்றார்.

தமிழ் செய்திகள்/தமிழ்நாடு/

”அமெரிக்காவே மிரட்டினாலும் முதல்வர் ஸ்டாலின் பணிய மாட்டார்” டிடிவி தினகரன் விமர்சனத்திற்கு ஓபிஎஸ் பதில்

Thank You

Related Posts

”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 1:17 PM IST மணிப்பூர் ஒரு அமைதியான மாநிலம். ஆனால் அமைதியாக இருந்த மணிப்பூரில் பாஜக கலவரத்தை ஏற்படுத்தி ஆயிரம் கணக்கான மக்கள் இறந்துள்ளனர் – ராகுல் காந்தி ராகுல் காந்தி மகளிர் உரிமைத் தொகை,…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5% அதிகரிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 7:56 AM IST தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட, குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 5 விழுக்காடு அதிகரித்துள்ளது. செய்தி18 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4,023 பேர் போட்டியிடும் நிலையில் 3,992 பேரின் பிரமாணப்பத்திரங்களை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

மங்காத்தா vs ஜனநாயகன் : பொங்கலுக்கு அஜித் திரைப்படம் ரீ-ரிலீஸ் : விஜய் உடன் மோத திட்டம் ? – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 3 views
மங்காத்தா vs ஜனநாயகன் : பொங்கலுக்கு அஜித் திரைப்படம் ரீ-ரிலீஸ் : விஜய் உடன் மோத திட்டம் ? – Kumudam

Latest CEH Exam Questions and Answers – Study Online for Certified Ethical Hacker – TN News

  • By admin
  • April 20, 2026
  • 7 views

”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 20, 2026
  • 16 views
”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 20, 2026
  • 18 views
Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 3 views
’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

  • By admin
  • April 20, 2026
  • 7 views
`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்
.site-info { display: none; }