– விளம்பரம் –
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது துவங்கியது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகளானது நேற்றுடன் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து 12 அணிகள் இந்த தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டு எட்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன. அந்த வகையில் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் இன்று முதல் துவங்கி நடைபெற இருக்கிறது.
இறுதிப்போட்டியில் விளையாடப்போகும் 2 அணிகள் : இயான் மோர்கன் கணிப்பு
இந்த சூப்பர் 8 சுற்றில் இடம் பிடித்துள்ள எட்டு அணிகளும் தலா நான்கு அணிகளாக இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பிரிவுகளிலும் இடம்பெற்றிருக்கும் நான்கு அணிகளும் மற்ற அணிகளுடன் ஒவ்வொரு போட்டியில் விளையாடும் வகையில் அட்டவணை வகுக்கப்பட்டுள்ளது.
– விளம்பரம் –
இந்த சூப்பர் 8 சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கும், பின்னர் அதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டியிலும் விளையாடும் வகையில் அட்டவணை வகுக்கப்பட்டுள்ளது. இந்த 2026 டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
அதே வேளையில் இந்த 2026 டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் இரண்டு அணிகள் எது? சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த பல்வேறு கருத்துக்களை முன்னாள் வீரர்கள் பலரும் வழங்கி வருகின்றனர்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : 3 முறை டக் அவுட்டானாலும் பரவாயில்ல.. அபிஷேக் சர்மாவுக்கு தான் வாய்ப்பு.. காரணத்தை கூறிய – மோர்னே மோர்கல்
அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான இயான் மோர்கன் இந்த 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் இரண்டு அணிகள் எது? என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில் : இந்த 2026 டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் அணிகளாக என்னை பொறுத்தவரை இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் தான் இருக்கும் என்று இயான் மோர்கன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்