கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை இணையத்தில் நாங்கள் கசிய விடவில்லை என மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை இணையத்தில் நாங்கள் கசிய விடவில்லை என மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்சார் போர்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திலிருந்து (CBFC) தமிழ்த் திரைப்படமான “ஜன நாயகன்” கசிந்ததாகக் கூறும் செய்திகள் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை.
சான்றிதழுக்காக சமர்ப்பிக்கப்படும் அனைத்துத் திரையரங்கு திரைப்படங்களுக்கும் பாதுகாப்பான KDM (Key Delivery Message) முறை பின்பற்றப்படுகிறது. ‘ஜன நாயகன்’ படத்தின் DCP (Digital Cinema Package), மார்ச் 17-ம் தேதி மும்பையில் உரிய அங்கீகாரத்துடன் விண்ணப்பதாரரிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்று முதல் அது அவர்களிடமே உள்ளது.
தமிழ் திரைப்படமான “ஜன நாயகன்” திரைப்படம் மத்திய திரைப்பட சான்றிதழில் (CBFC) இருந்து கசிந்ததாகக் கூறப்படும் அறிக்கைகள் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை.
சான்றிதழுக்காக சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரையரங்கப் படங்களுக்கும் பாதுகாப்பான கேடிஎம் (முக்கிய டெலிவரி செய்தி) முறையைப் பின்பற்றுவதாக CBFC தெளிவுபடுத்தியுள்ளது. pic.twitter.com/V8qwL7GotP
– மகாராஷ்டிராவில் PIB 🇮🇳 (@PIBMumbai) ஏப்ரல் 11, 2026
மேலும் KDM, தயாரிப்பாளர் அல்லது இயக்குநரிடம் மட்டுமே இருக்கும். முறையான KDM இல்லாமல், திரைப்படத்தை அணுகவோ அல்லது பார்க்கவோ முடியாது. படத்தின் கன்டென்ட் கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.