பறவை காய்ச்சல் எதிரொலி, 20-க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழப்பு: கிண்டி சிறுவர் பூங்கா மூடல்   – Kumudam

சென்னை அடையாறில் காகங்களுக்கு பறவை காய்ச்சல் (H5N1) உறுதி செய்யப்பட்டதையடுத்து, தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்கள் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு வேகவைத்து (Half-boil தவிர்க்கவும்) உண்ண வேண்டும், இறந்த பறவைகளை கைகளால் தொடக்கூடாது, மற்றும் காய்ச்சல்/மூச்சுத்திணறல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறுவர் பூங்காவில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்துள்ளன. கரண்டிவாயன், கூழைக்கடா, செங்கால் உள்ளிட்ட நாரைகள், கொக்குகளுக்கு உயிரிழந்தன. இந்த பறவைகள் அடுத்தடுத்து உயிரிழந்த காரணத்தால், இதன் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த பரிசோதனை முடிவில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக மற்ற பறவைகளுக்கும் காய்ச்சல் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் கிண்டி சிறுவர் பூங்காவிற்கு நாள்தோறும் ஆயிரகணக்கான பொதுமக்கள் வருகை தருகின்றனர். அவர்களுக்கும் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், கிண்டி சிறுவர் பூங்கா மூடப்பட்டுள்ளது. பறவை உயிரிழந்திருப்பது சிறுவர் பூங்கா பார்வையாளர்களிடையே பெரும் அச்சத்தை  ஏற்படுத்தி உள்ளது.

Thank You

Related Posts

மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

இன்று காலை சென்னை சென்ட்ரல் – தேனாம்பேட்டை இடையே மெட்ரோ ரயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். அப்போது, அரசின் நலத்திடங்கள் குறித்து பயணிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சி மீண்டும் அமைவதற்கு ஆதரவு தருமாறு மெட்ரோ பயணிகளிடம் வாக்கு…

Latest Cisco 350-401 ENCOR Exam Questions and Answers – Study Online Today – TN News

NEW QUESTION 1 Which two pieces of information are necessary to compute SNR? (Choose two.)   A.  EIRP B.  noise floor C.  antenna gain D.  RSSI E.  transmit power …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

  • By admin
  • April 19, 2026
  • 3 views
லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 19, 2026
  • 9 views
திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 19, 2026
  • 9 views
நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 15 views
மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

  • By admin
  • April 19, 2026
  • 15 views
அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 11 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam
.site-info { display: none; }