இந்திய அணியின் துருப்பு சீட்டே இவர்தான்.. அவரால் தான் இந்திய அணி வெற்றி பெறுகிறது





அபிஷேக் நாயர்


– விளம்பரம் –

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது நடப்பு சாம்பியனாக 2026 டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்களில் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. அதனால் பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படும் இந்திய அணி சூப்பர் 8 சுற்றிலும் தோல்வியை சந்திக்காது என்று பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

இந்திய அணியின் துருப்பு சீட்டு இவர்தான் : அபிஷேக் சர்மா

ஆனால் சூப்பர் 8 சுற்றின் போது தென்னாப்பிரிக்க அணியிடம் படுமோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி அதன் பின்னர் சுதாரித்து ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்தது. அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியிலும் பங்கேற்று விளையாட காத்திருக்கிறது.

– விளம்பரம் –

இந்த அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் யார்? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் இந்திய அணியின் திருப்புச்சீட்டு பும்ரா தான் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணி இந்த டி20 உலக கோப்பை தொடரில் பெற்று வரும் வெற்றிகளுக்கு மிக முக்கியமான காரணமாக பும்ராவை நான் பார்க்கிறேன். ஏனெனில் போட்டியின் ஆரம்பத்திலும் சரி, மிடில் ஓவர்களிலும் சரி, இறுதிகட்ட ஓவர்களிலும் சரி எங்கு கொண்டு வந்தாலும் அவர் மிக சிறப்பாக செயல்பட்டு விக்கெட் வீழ்த்துகிறார். அவரது பந்துவீச்சு ஆட்டத்தின் போக்கையே மாற்றுவதாக இருக்கிறது.

– விளம்பரம் –

இதையும் படிங்க : டி20 உலககோப்பை இறுதிப்போட்டியில் மோதப்போகும் 2 அணிகள் இதுதான் – மெக்ராத் கணிப்பு

அதிலும் குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அவர் ஹெட்மயரை வீழ்த்திய விதத்தை பார்க்கும் போது அவரைப் போன்று எந்த ஒரு வீரராலும் பந்துவீச முடியாது என்று தெரிகிறது. அந்த அளவிற்கு அவர் பந்துவீச்சில் இந்திய அணியின் முதுகெலும்பாக இருந்து வருகிறார். இந்த தொடரை பொருத்தவரை இந்திய அணி துருப்பு சீட்டு ஜஸ்ப்ரீத் பும்ரா தான் என அபிஷேக் நாயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்









Thank You

Related Posts

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 6 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று…

ஜஸ்ப்ரீத் பும்ராவின் ஆல்டைம் சாதனையை காலி செய்து வரலாறு படைத்த அஷ்வினி குமார் – விவரம் இதோ

ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முக்கியமான லீக் ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி அசத்தியது. அந்த போட்டியில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு விறுவிறு : 1 மணி வரை 56.81 சதவிகிதம் வாக்கு பதிவு  – Kumudam

  • By admin
  • April 23, 2026
  • 4 views
சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு விறுவிறு : 1 மணி வரை 56.81 சதவிகிதம் வாக்கு பதிவு  – Kumudam

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

  • By admin
  • April 23, 2026
  • 5 views
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

Trisha | “கண்டிப்பாக அனைவரும்…” – வாக்களித்த பின் நடிகை திரிஷா கூறியது… என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 23, 2026
  • 5 views
Trisha | “கண்டிப்பாக அனைவரும்…” – வாக்களித்த பின் நடிகை திரிஷா கூறியது… என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

மாஸ்டரிங் NEET PG: வெற்றிக்கான வழிகாட்டி – TN செய்திகள்

  • By admin
  • April 23, 2026
  • 13 views
மாஸ்டரிங் NEET PG: வெற்றிக்கான வழிகாட்டி – TN செய்திகள்

2018-க்குப் பிறகு இந்தியா வந்த பாக்,. அணி: ‘அழுத்தம் அதிகமிருக்கும்’

  • By admin
  • April 23, 2026
  • 9 views
2018-க்குப் பிறகு இந்தியா வந்த பாக்,. அணி: ‘அழுத்தம் அதிகமிருக்கும்’

பையநாடு ஒரு குளமாக மாறுகிறது, ஆனால் மலப்புரம் மற்றொரு டிராவில் குடியேறுகிறது

  • By admin
  • April 23, 2026
  • 6 views
பையநாடு ஒரு குளமாக மாறுகிறது, ஆனால் மலப்புரம் மற்றொரு டிராவில் குடியேறுகிறது
.site-info { display: none; }