வாராந்திர ராசிபலன்கள் (04.02.2026 – 10.02.2026) – Kumudam


4.2.2025 முதல் 10.2.2026 வரை ராசி பலன்கள்

– யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
 

மேஷம்: நன்மைகள் அதிகரிக்கக் கூடிய காலகட்டம். அலுவலகத்தில் எதிர்பார்த்த மேன்மைகள் கைகூடும். உங்கள் திறமைக்கு உரிய மதிப்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லவை நடக்கத் தொடங்கும். இன்சொல் பேசினால்  இனிமை இரட்டிப்பாகும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் உண்டாகும்க.  வாரிசுகளால் பெருமை சேரும்க. அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு உயர்வுகள் நிலைக்கும்.கலைஞர்களின் கனவுகள் நனவாகும். பயணத்தில் உடைமை பத்திரம். காது, மூக்கு, தொண்டை உபாதை வரலாம். விநாயகர் வழிபாடு விசேஷம் தரும்.

ரிஷபம்: முயற்சிகளால் முன்னேறவேண்டிய காலகட்டம். பணியிடத்தில் திட்டமிட்டு செயல்பட்டால், திறமைக்கு உரிய பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி மலரும். குடும்ப பிரச்னைகளில் மூன்றாம் நபர் தலையிட அனுமதிக்க வேண்டாம். அசையும், அசையாப் பொருட்சேர்க்கை ஏற்படும்க. அரசு, அரசியல் சார்ந்தவர்கள் பொறுமையுடன் இருங்கள். வாணிபத்தில் சீரான லாபம் இருக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வரும். பயணத்தில் வேகம் வேண்டாம். சுவாச உபாதை அஜீரணக் கோளாறு வரலாம், பெருமாள் வழிபாடு பெருமை சேர்க்கும்.
 

மிதுனம்: சங்கடங்கள் நீங்கக் கூடிய காலகட்டம். பணியிடத்தில் வீண் ஜம்பம் வேண்டாம். தகுதிக்கு உரிய பெருமை நிச்சயம் வந்து சேரும். வீட்டில் விட்டுக்கொடுத்துப் போனால் விடியல் பிறக்கும். பெற்றோர் ஆலோசனைகளைக் கேளுங்கள். செய்யும் தொழிலில் உழைப்புக்கு ஏற்ற உயர்வு வரும். அரசு, அரசியலில் உள்ளோர் அமைதியாக இருப்பதே நல்லது. கலைஞர்களுக்கு ஆதரவு தொடரும். வாகனப் பழுதை உடன் சீர் செய்யுங்கள். தலைவலி, நரம்பு உபாதை வரலாம். அனுமன் வழிபாடு ஆனந்தம் தரும்.
 
கடகம்: திட்டமிட்டுச் செயல்படவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் திறமை பேசப்படும். பொறுப்புகளை நேரடியாக கவனியுங்கள். வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். சகோதர உறவுகளால் சகாயம் உண்டு. வரவை சேமியுங்கள். செய்யும் தொழிலில் லாபம் சீராக இருக்கும். அரசு, அரசியலில் உள்ளோருக்கு ஆதரவு தொடரும். மேலிடத்திடம் வீண் சர்ச்சை வேண்டாம். கலைஞர்களுக்கு திறமை பேசப்படும். வாகனத்தில் கவனச்சிதறல் கூடாது. தூக்கமின்மை,தலைவலி தொல்லை வரலாம். துர்க்கை வழிபாடு துளிர்க்கச் செய்யும்.

சிம்மம்: நல்லவை நடக்கத் தொடங்கும் காலகட்டம். பணியிடத்தில் மேன்மைகள் கைகூடும். உடனிருப்போர் ஆதரவு உண்டு. குடும்பத்தில் ஒற்றுமை உருவாகும். ஆடை, ஆபரனம் சேரும். வாழ்க்கைத்துணை உடல்நலம் சீராகும்.வாரிசுகளால் பெருமை சேரும். செய்யும் தொழிலில் புதிய முதலீடுகளில் நிதானம் தேவை. அரசு, அரசியல் துறையினர்க்கு சீரான வளர்ச்சி ஏற்படும். கலைஞர்கள் முயற்சிகளால் வெல்லலாம். வாகனத்தில் வேகம் கூடாது. மூட்டு, முதுகு, கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம். சிவ வழிபாடு சிறப்பு தரும்.
 
கன்னி: ஏற்றங்கள் ஏற்படக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் பதவி, பாராட்டுகள் கைகூடும்.சிலருக்கு வெளியூர் வெளிநாட்டு வாய்ப்பு வரும். இல்லத்தில் நல்லவை நடக்கும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடும். எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டு. செய்யும் தொழிலில் அலட்சியம் கூடாது. அரசு, அரசியலில் உள்ளோர் பாராட்டப்படுவீர்கள். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தொடர்ச்சியாக வரும். இரவுப்பயணம் தவிருங்கள். அடிவயிறு,கீழ் முதுகு உபாதை வரலாம். பைரவர் வழிபாடு பசுமை சேர்க்கும்.
 
துலாம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலகட்டம். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வீண் சலிப்பு வேண்டாம். குடும்பத்தில் இனிய சூழல் நிலவும். வாழ்க்கைத் துணையுடன் ஒற்றுமை ஏற்படும். வாரிசுகளிடம் கடுமை வேண்டாம். வரவு சீராக இருக்கும். செய்யும் தொழிலில் சுணக்கம் நீங்கும். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு ஆதரவு அதிகரிக்கும். கலைஞர்கள் சஞ்சலம், சபலம் தவிருங்கள். பயணத்தில் உடைமை பத்திரம். நரம்பு, மூட்டு உபாதைகள் வரலாம். கணபதி வழிபாடு களிப்பு தரும்.
 
விருச்சிகம்: உயர்வுகள் உருவாகும் காலகட்டம். பணியிடத்தில் நேரம் தவறாமை முக்கியம். பிறர் குறையைப் பேசவேண்டாம். இல்லத்தில் சுமுகப் போக்கு நிலவும். சுபகாரியங்களில் ஆடம்பரம் வேண்டாம். ஆடை, ஆபரணம் சேரும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். அரசு, அரசியலில் உள்ளோர் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. கலைஞர்களுக்கு பாராட்டு பெருமை கிட்டும். இரவுப் பயணத்தில் நிதானம் முக்கியம். அலர்ஜி, சளி, கால் உபாதைகள் வரலாம். மகாலக்ஷ்மி வழிபாடு மங்களம் தரும்.
 

தனுசு: முயற்சிகள் பலிதமாகும் காலகட்டம். அலுவலகத்தில் அலட்சியம் கூடாது.உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி தரும். வீட்டில் சந்தோஷம் குடிபுகும்.வீடு, வாகனம் மாற்ற நேரிடலாம். வாரிசுகள் உடல்நலத்தில் கவனம் முக்கியம். பணவரவு உண்டு. செய்யும் தொழிலில் நேரடி கவனம் முக்கியம். அரசு, அரசியலில் உள்ளோர் வீண் வாக்குறுதி தரவேண்டாம். கலைஞர்கள் திறமையால் வெல்லலாம். வாகனப்பழுதை உடன் கவனியுங்கள். கழுத்து, நரம்பு, கண் உபாதை வரலாம்.நரசிம்மர் வழிபாடு நன்மை சேர்க்கும்.
 
மகரம்: சாதகங்கள் உருவாகும் காலகட்டம். பணியிடத்தில் உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும். பிறரின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிட வேண்டாம். வீட்டில் விடியல் வெளிச்சம் பரவும். தரல்,பெறலில் நிதானம் தேவை. வரவு அதிகரிக்கும். செய்யும் தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும். அரசு, அரசியலில் உள்ளோர் பாராட்டப்படுவீர்கள். கலைஞர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வரும்.வாகனத்தில் வேகம் வேண்டாம். இடுப்பு, மூட்டு, சளி உபாதை வரலாம். ஷண்முகர் வழிபாடு சந்தோஷம் தரும்.
 
கும்பம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமை பேசப்படும். மேலதிகாரிகள் ஆதரவு உண்டு. வீட்டில் சுமுகமான சூழல் நிலவும். உறவுகள் வருகையால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்தில் விட்டுக்கொடுப்பது நல்லது. செய்யும் தொழிலில் முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றம் ஏற்படும். அரசு, அரசியலில் உள்ளோர் பிறருக்கு ஜாமீன் தரவேண்டாம். கலைஞர்கள் சின்சியராக உழைத்தால் சீரான நன்மை பெறலாம். இரவுப் பயணத்தில் இடைவழி உணவு தவிருங்கள்.பற்கள், ரத்த நாளம், அல்சர் உபாதை வரலாம். ஆஞ்சநேயர் வழிபாடு ஆனந்தம் தரும்.

மீனம்: அமைதியாகச் செயல்படவேண்டிய காலகட்டம். பணியிடத்தில் வீண் ரோஷம் வேண்டாம்.பிறர் குறையைப் பேசாதீர்கள். பொறுப்புகள் தாமதமானாலும் நிச்சயம் கைகூடும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். குழந்தைகளால் பெருமை உண்டு. தம்பதியர் அன்யோன்யம் உண்டு. செலவுகளில் நிதானம் முக்கியம். செய்யும் தொழிலில் ஏற்றம் ஏற்படும். அரசு, அரசியலில் உள்ளோர் சீரான வளர்ச்சி பெறுவர். கலைஞர்கள் படைப்பு ரகசியம் பகிரவேண்டாம். பயணத்தில் நிதானம் முக்கியம்.சோம்பல்,ரத்த அழுத்த மாற்றம், ரத்த சோகை உபாதை வரலாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு தழைக்கச் செய்யும்.



Thank You

  • Related Posts

    குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்: நிம்மதி.. சிம்ம ராசிக்காரர்களுக்கு மனசெல்லாம் மத்தாப்பு – Kumudam

    நிதானமாகச் செயல்பட்டா, நிம்மதி நிலைக்கும் ஆண்டுங்க. பணியிடத்துல உங்க திறமைக்கு ஏற்ப புதிய பொறுப்புகளை ஏற்கவேண்டி வரலாம்க. சக ஊழியர்கள் ஆதரவு சந்தோஷம் தரும்க. அதேசமயம் மறைமுக எதிரிகள் மேலிடத்துக்கும் உங்களுக்கும் இடையில சிண்டுமுடியலாம், கவனமா இருங்க. கோப்புகள் எதிலும் கையெழுத்திடும்…

    குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்: கன்னி ராசிக்காரர்களுக்கு கொட்டப்போகும் பண மழை – Kumudam

    கன்னி: அலுவலகத்துல அல்லவை நீங்கி நல்லவை அதிகரிக்கத் தொடங்கும்க. எட்டாக் கனியாக இருந்த பதவி, ஊதிய உயர்வுகள் கைகூடி வரும்க. மேலிடத்தால் உங்க திறமை உணரப்பட்டு பெருமை சேரும்க. உடன் பணிபுரியும் யாரையும் உதாசீனப்படுத்த வேண்டாம்க. தொடர் உழைப்புனால களைப்பு ஏற்பட்டாலும்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    அரியர் கிளியர் பண்ண ‘கோல்டன்’ வாய்ப்பு!! சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அப்டேட்… | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

    • By admin
    • April 24, 2026
    • 3 views
    அரியர் கிளியர் பண்ண ‘கோல்டன்’ வாய்ப்பு!! சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அப்டேட்… | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

    ஏங்க கொஞ்சம் நில்லுங்க… பனைமரத்தையா வெட்டப் போறீங்க! – Kumudam

    • By admin
    • April 24, 2026
    • 8 views
    ஏங்க கொஞ்சம் நில்லுங்க… பனைமரத்தையா வெட்டப் போறீங்க! – Kumudam

    Ajith | தமிழகத்தின் முதல் ஓட்டு… 7 மணிக்கு முன்பாகவே வாக்களித்த நடிகர் அஜித்… காரணம் என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

    • By admin
    • April 24, 2026
    • 7 views
    Ajith | தமிழகத்தின் முதல் ஓட்டு… 7 மணிக்கு முன்பாகவே வாக்களித்த நடிகர் அஜித்… காரணம் என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

    வயர்லெஸ் சார்ஜிங்கைப் புரிந்துகொள்வது: இது எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அதன் நன்மைகள் – TN செய்திகள்

    • By admin
    • April 24, 2026
    • 8 views
    வயர்லெஸ் சார்ஜிங்கைப் புரிந்துகொள்வது: இது எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அதன் நன்மைகள் – TN செய்திகள்

    CSK: "இந்த அணிக்காக விளையாடுவதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்!"- ஆட்ட நாயகன் சஞ்சு சாம்சன்

    • By admin
    • April 24, 2026
    • 10 views
    CSK: "இந்த அணிக்காக விளையாடுவதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்!"- ஆட்ட நாயகன் சஞ்சு சாம்சன்

    Indian sports wrap, April 20: Suraj Chand wins PSA Challenger Tour event in Chennai

    • By admin
    • April 24, 2026
    • 12 views
    Indian sports wrap, April 20: Suraj Chand wins PSA Challenger Tour event in Chennai
    .site-info { display: none; }