வாஸ்து டிப்ஸ்: வீட்டில் பூஜை அறை எங்கு இருக்க வேண்டும்,  எத்தனை மாடி இருக்க வேண்டும் – Kumudam


பூஜை அறை எங்கு  எந்த திசையில் இருக்க வேண்டும் !

எந்த வீட்டிலும் பூஜை அறை கிழக்குப் பார்த்து இருந்தால் சிறப்பு. ஆனால், எல்லா வீடுகளிலும் கிழக்குப் பார்த்து அறையை அமைத்துக் கொள்ள முடிவதில்லை. எனவே, மேற்குப் பார்த்து அமைந்த பூஜை அறைகளும் சிறப்பானவையே.பூஜை அறையில் கடவுளர் உருவங்களோடு சிலைகளையும் வைத்து வணங்கலாமா என்ற ஐயம் சிலருக்கு எழலாம். சிலைகளை வைத்து வழிபடுவது தவறில்லை. ஆனால், அவை பின்னப்படாமல் அதாவது விரிசல் ஏதும் விழாமல் சுத்தமாக இருக்கவேண்டும்.பூஜை அறை அமைத்துக்கொள்ள வசதியில்லாதவர்கள், திறந்தவெளியில் கடவுள் படங்களை வைத்து வணங்குவதில் தோஷக் குறைவு எதுவுமில்லை!

மாடி எத்தனை மாடி இருந்தால் நல்லது !

ஒரு வீட்டில் அரசு அனுமதியோடு எத்தனை மாடிகள் வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம். முதல் மாடியைப் போலவே அடுத்த மாடியும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இத்தனைக் கதவுகள், இத்தனை ஜன்னல்கள்தான் வரவேண்டும் என்ற கணக்கு எதுவும் கிடையாது. ஜன்னல்களின் எண்ணிக்கை ஒற்றைப்படையாக வரக்கூடாது என்ற கருத்தும் எல்லா இடங்களுக்கும் ஏற்புடையது அல்ல.வெண்டிலேட்டர் இருக்கிறதே… இதுவே போதும் என்று திருப்தி அடையக் கூடாது. அவசியமான இடத்தில் வைக்கும் ஜன்னல் வாழ்க்கையில் வளம் சேர்க்கும். பொதுவாக ஒரு ஜன்னலாவது கிழக்கு நோக்கி, வீட்டுக்குள் வெளிச்சம் வரும் வகையில் இருப்பது நல்லது.

ஆரோக்யம் அவசியம்!

பிணியால் வாடி இருப்பது கொடுமையானது. அதுவும் இந்தக் கொடுந்தொற்று காலத்தில் கொரோனா லாக்டவுன், லாக் அப்பை விடக் கொடியதாக இருக்கிறது. ஒரே நேரத்தில் எல்லோரும் வீட்டில் இருப்பதில் சில சிரமங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நோயுற்றவர்களை தனிமைப்படுத்தும் போது அவர்களுக்கு எந்த அறையை ஒதுக்கலாம்

என்று கேட்பவர்களுக்கு சில ஆலோசனைகள்:

வயதில் பெரியவர்களுக்கு / முதியவர்களுக்கு நைருதி அறை சிறந்தது.நடுத்தர வயதினர் அக்னி, வாயு மூலை அறைகளில் ஓய்வெடுக்கலாம்.வளரும் குழந்தைகளும் இளைஞர்களும் ஈசானிய அறையில் இருக்கலாம்.வீட்டில் அறைகளே இல்லையா? கவலை வேண்டாம். வீட்டின் வடகிழக்கு மூலையைத் தவிர மற்ற இடங்களில் கட்டில் போட்டு தனிமைப்படுத்திக் கொள்ளலாம். இதனால் பிணியின் தாக்கம் விரைவில் தணியும். ஆரோக்யம் சீராகும்.



Thank You

  • Related Posts

    குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்: நிம்மதி.. சிம்ம ராசிக்காரர்களுக்கு மனசெல்லாம் மத்தாப்பு – Kumudam

    நிதானமாகச் செயல்பட்டா, நிம்மதி நிலைக்கும் ஆண்டுங்க. பணியிடத்துல உங்க திறமைக்கு ஏற்ப புதிய பொறுப்புகளை ஏற்கவேண்டி வரலாம்க. சக ஊழியர்கள் ஆதரவு சந்தோஷம் தரும்க. அதேசமயம் மறைமுக எதிரிகள் மேலிடத்துக்கும் உங்களுக்கும் இடையில சிண்டுமுடியலாம், கவனமா இருங்க. கோப்புகள் எதிலும் கையெழுத்திடும்…

    குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்: கன்னி ராசிக்காரர்களுக்கு கொட்டப்போகும் பண மழை – Kumudam

    கன்னி: அலுவலகத்துல அல்லவை நீங்கி நல்லவை அதிகரிக்கத் தொடங்கும்க. எட்டாக் கனியாக இருந்த பதவி, ஊதிய உயர்வுகள் கைகூடி வரும்க. மேலிடத்தால் உங்க திறமை உணரப்பட்டு பெருமை சேரும்க. உடன் பணிபுரியும் யாரையும் உதாசீனப்படுத்த வேண்டாம்க. தொடர் உழைப்புனால களைப்பு ஏற்பட்டாலும்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ஏங்க கொஞ்சம் நில்லுங்க… பனைமரத்தையா வெட்டப் போறீங்க! – Kumudam

    • By admin
    • April 24, 2026
    • 8 views
    ஏங்க கொஞ்சம் நில்லுங்க… பனைமரத்தையா வெட்டப் போறீங்க! – Kumudam

    Ajith | தமிழகத்தின் முதல் ஓட்டு… 7 மணிக்கு முன்பாகவே வாக்களித்த நடிகர் அஜித்… காரணம் என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

    • By admin
    • April 24, 2026
    • 7 views
    Ajith | தமிழகத்தின் முதல் ஓட்டு… 7 மணிக்கு முன்பாகவே வாக்களித்த நடிகர் அஜித்… காரணம் என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

    வயர்லெஸ் சார்ஜிங்கைப் புரிந்துகொள்வது: இது எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அதன் நன்மைகள் – TN செய்திகள்

    • By admin
    • April 24, 2026
    • 8 views
    வயர்லெஸ் சார்ஜிங்கைப் புரிந்துகொள்வது: இது எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அதன் நன்மைகள் – TN செய்திகள்

    CSK: "இந்த அணிக்காக விளையாடுவதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்!"- ஆட்ட நாயகன் சஞ்சு சாம்சன்

    • By admin
    • April 24, 2026
    • 10 views
    CSK: "இந்த அணிக்காக விளையாடுவதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்!"- ஆட்ட நாயகன் சஞ்சு சாம்சன்

    Indian sports wrap, April 20: Suraj Chand wins PSA Challenger Tour event in Chennai

    • By admin
    • April 24, 2026
    • 12 views
    Indian sports wrap, April 20: Suraj Chand wins PSA Challenger Tour event in Chennai

    Summer Travel: பழங்கால இன்ஜினியரிங்கின் உச்சம்! உலகின் டாப் சுற்றுலாத் தலங்கள் இதோ.!

    • By admin
    • April 24, 2026
    • 11 views
    Summer Travel: பழங்கால இன்ஜினியரிங்கின் உச்சம்! உலகின் டாப் சுற்றுலாத் தலங்கள் இதோ.!
    .site-info { display: none; }