கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேன் ஓட்டுநர் பிரேக்கிற்குப் பதில், ஆக்சிலேட்டரை அழுத்தியதால் அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மளிகைக் கடை மீது பிக்-அப் வேன் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது. ஓட்டுநர் பிரேக்கிற்குப் பதில், ஆக்சிலேட்டரை அழுத்தியதால் அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. நடந்தது என்ன?
வேன் ஓட்டுநர் பிரேக்கிற்குப் பதில், ஆக்சிலேட்டரை அழுத்தியதால் அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஓட்டுநரை சுற்றிவளைத்து தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மளிகைக் கடைக்கு பொருட்கள் வாங்க வந்தவர்களுக்கு நேர்ந்த கதி என்ன?
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த வீரராகவ வலசைப் பகுதியை சேர்ந்தவர் உஷாராணி. இவர், மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக ஆலங்காயம் சென்றுள்ளார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, ஆலங்காயத்தில் இருந்து காவலூர் நோக்கி ஒரு மகேந்திரா பிக்-அப் வேன் ஒன்று சென்றது.
திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன், மளிகை கடை மீது மோதியது. இந்த விபத்தில் மளிகைக் கடையில் நின்றிருந்த உஷாராணி மற்றும் சாலையோரம் நடந்துசென்ற சுஹேல் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். வலியால் துடித்துக் கொண்டிருந்த இருவரையும், அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில், உஷாராணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக ஆலங்காயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, காவலூர் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் திருவின்குமாரை கைது செய்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய பிக்-அப் வேனையும் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், பிக்-அப் வேன் மளிகைக் கடை மீது மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.
அப்போது, ஆத்திரமடைந்த பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய வேன் ஓட்டுநரை சுற்றிவளைத்து தாக்கியுள்ளனர். வேன் ஓட்டுநர் பிரேக் அழுத்துவதற்கு பதிலாக, கவனக்குறைவாக ஆக்சிலேட்டரை அழுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட விபத்தில் ஒரு உயிர் பறிபோயுள்ளது. சாலையோரம் நடந்துசென்ற ஒரு சிலர் வேன் தறிகெட்டு வருவதைப் பார்த்து தப்பி ஓடியுள்ளனர். இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.