காட்டான் என்பது மர்மம், வன்முறை மற்றும் உளவியல் கூறுகளை ஒரே நேரத்தில் கோர்த்து, நான் லீனியர் கதை சொல்லல் முறையில் வழங்கப்படும் ஒரு டார்க் கிராமத்து த்ரில்லர் சீரிஸ். விஜய்சேதுபதி இந்தத் தொடரை தன் தனித்துவமான ஸ்கிரீன் பிரசன்ஸால் தாங்கி நிறுத்துகிறார். அவரது தோற்றமே இந்தத் தொடரின் மிகப்பெரிய பலம். மிலிந்த் சோமன் ஆளுமை, அதிகார உணர்வை கொண்டு வருகிறார், கதைக்கு வேறொரு பரிமாணத்தை சேர்க்கிறார்.
சுதேவ் நாயர் திடமான துணை நடிப்பை வழங்கி, முக்கியமான மோதல் காட்சிகளில் கதையை வலுப்படுத்துகிறார்.விஜேபார்வதி இயல்பான நடிப்பால் கதைக்கு உணர்வு ஆழத்தை கொண்டு சேர்க்கிறார். தொடரின் இருண்ட மற்றும் கரடுமுரடான தொனி, வலுவான சூழல் உணர்வு மற்றும் காட்சி வடிவமைப்பு இவை அனைத்தும் பாராட்டத்தக்கவை. மர்மங்களும் திருப்பங்களும் உங்களை ஈர்த்துக்கொண்டே போகும், இருந்தாலும் சில பகுதிகள் சற்று குழப்பமாக தோன்றலாம். ஒட்டுமொத்தமாக, காட்டான் நம்பகமாக நிற்கும் ஒரு தரமான த்ரில்லர் என குறிப்பிட்டுள்ளார்.
#Kaattaan – விமர்சனம் #Kaattaan இது ஒரு டார்க் ரூரல் த்ரில்லர்🙂 இது மர்மம், வன்முறை மற்றும் உளவியல் கூறுகளைக் கலக்கிறது🔥 ஒரு நேரியல் அல்லாத கதையுடன்⚡.#VijaySethupathi ஒரு வலுவான செயல்திறனை வழங்குகிறது👏🔥 தனித்துவமான திரை இருப்பு மற்றும் தீவிரத்துடன் தொடரை எடுத்துச் செல்கிறது🙂.#மிலிந்த்சோமன்… pic.twitter.com/nQhiMruyKb
— சினிமா (@HdUpdatesMovie1) மார்ச் 27, 2026