சென்னை உள்பட 5 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை பெய்யும்:வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை  – Kumudam


இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 5 மணி நேரமாக மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் இலங்கையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது சென்னைக்கு 450 கி.மீ. தொலைவில் தென்கிழக்கிலும், காரைக்காலில் இருந்து 250 கி.மீ. தொலைவில் தென்கிழக்கிலும் நிலை கொண்டுள்ளது.

மேற்கு வட மேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகர்ந்து இலங்கை அருகே இன்று மாலைக்குள் யாழ்ப்பாணம் – திரிகோணமலை இடையே கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக் கூடும். அதுபோல, ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



Thank You

Related Posts

அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்  – Kumudam

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 0.9 கிமீ உயரத்தில், வடகிழக்கு பீகார் முதல் தென் தமிழகம் வரை ஜார்க்கண்ட், வடக்கு சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், விதர்பா, மரத்வாடா மற்றும் உள் கர்நாடகா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு…

காற்றழுத்த தாழ்வு பாதை, 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் – Kumudam

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 0.9 கிமீ உயரத்தில், கிழக்கு உத்தரப்பிரதேசம் முதல் தென்தமிழகம் வரை விதர்பா, மரத்வாடா மற்றும் உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (trough) நிலவுகிறது. இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ஆயுஷ் மாத்ரேவுக்கு பதிலா இந்த 2 பேர்ல ஒருத்தரை செலக்ட் பண்ணலாம்

  • By admin
  • April 23, 2026
  • 7 views
ஆயுஷ் மாத்ரேவுக்கு பதிலா இந்த 2 பேர்ல ஒருத்தரை செலக்ட் பண்ணலாம்

சட்டமன்ற தேர்தல் 3 மணி நிலவரம் :   70  சதவிகிதம் வாக்குப்பதிவு, 4 கோடி பேர் வாக்களிப்பு   – Kumudam

  • By admin
  • April 23, 2026
  • 12 views
சட்டமன்ற தேர்தல் 3 மணி நிலவரம் :   70  சதவிகிதம் வாக்குப்பதிவு, 4 கோடி பேர் வாக்களிப்பு   – Kumudam

கூட்டத்தில் சிக்கிய நடிகை நிதி அகர்வால்: அத்துமீறிய ரசிகர்கள்  – Kumudam

  • By admin
  • April 23, 2026
  • 19 views
கூட்டத்தில் சிக்கிய நடிகை நிதி அகர்வால்: அத்துமீறிய ரசிகர்கள்  – Kumudam

தமிழக சட்டமன்ற வாக்குப்பதிவு நிறைவு: கடந்த தேர்தலை விட கூடுதல் வாக்கு பதிவாக சாதனை  – Kumudam

  • By admin
  • April 23, 2026
  • 4 views
தமிழக சட்டமன்ற வாக்குப்பதிவு நிறைவு: கடந்த தேர்தலை விட கூடுதல் வாக்கு பதிவாக சாதனை  – Kumudam

சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு விறுவிறு : 1 மணி வரை 56.81 சதவிகிதம் வாக்கு பதிவு  – Kumudam

  • By admin
  • April 23, 2026
  • 8 views
சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு விறுவிறு : 1 மணி வரை 56.81 சதவிகிதம் வாக்கு பதிவு  – Kumudam

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

  • By admin
  • April 23, 2026
  • 5 views
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்
.site-info { display: none; }