நாளை மறுநாள் தீர்ப்பு : ஜன 9-ம் தேதி ஜனநாயகன் ரிலீஸ் ஆவதில் சிக்கல்:விஜய் ரசிகர்கள் கவலை – Kumudam


நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தாமதம் குறித்து, படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு இன்று (விசாரணைக்கு வந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இந்த வழக்கில் தீர்ப்பு ஜனவரி 9 ஆம் தேதி வழங்கப்படும் என உயர் நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார். இதனால், அன்று வெளியாகவிருந்த திரைப்படத்தின் முதல் காட்சி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நீதிபதி சரமாரி கேள்வி

வழக்கின் விசாரணை தொடங்கியதும், நீதிபதி பி.டி. ஆஷா, “ஒரு திரைப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க பெரும்பான்மை உறுப்பினர்கள் முடிவு செய்த பின்னரும், ஏன் அதை மறு ஆய்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும்?” என்று தணிக்கை வாரியத்திடம் நேரடியாகக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த தணிக்கை வாரியத் தரப்பு, ஒரு திரைப்படத்திற்குச் சான்றிதழ் கொடுத்த பின்பும் வழக்குத் தொடுக்கலாம் என்றும், முக்கியமாக, இப்படத்தில் பாதுகாப்புப் படையின் இலச்சினை (Logo) அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டனர். வாரியத்திற்குத் திருப்தி இல்லாததாலேயே மறு ஆய்வுக்கு உட்படுத்துவதாகவும், மறுதணிக்கைக்கு 4 வாரங்கள் அவகாசம் தேவை என்றும் அவர்கள் கோரினர்.

தயாரிப்பு நிறுவனம் அதிருப்தி

தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கறிஞர், தணிக்கைச் சான்றிதழுக்கு டிசம்பர் 16 ஆம் தேதியே விண்ணப்பித்திருந்தும் காலதாமதம் செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். பெரும்பான்மை உறுப்பினர்கள் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க ஒப்புக்கொண்ட நிலையில், ஒரே ஒரு உறுப்பினர் மட்டும் உடன்பாடு தெரிவிக்கவில்லை என்பதற்காக மறு ஆய்வுக்குக் கோரிக்கை வைப்பது நியாயமற்றது என்றும் அவர் வாதிட்டார். ரூ.500 கோடி முதலீட்டில் தயாரான படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், திடீரென மீண்டும் தணிக்கைக்கு உட்படுத்த அவகாசம் கேட்பது பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் நீதிமன்றத்தில் கேள்விகளை அடுக்கினார்.

ஜனவரி 9-ல் தீர்ப்பு; முதல்காட்சிக்கு  சிக்கல்

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்தத் தணிக்கை விவகாரம் குறித்து ஜனவரி 9 ஆம் தேதி காலையில் தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். திரைப்படம் வெளியாகும் அதே நாளில் தீர்ப்பு வருவதால், முதல் காட்சியான காலை 9 மணிக்குத் திரைப்படம் திரையிடப்படுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்பைப் பொறுத்தே படத்தின் வெளியீடு அமையும் என்பதால், ரசிகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் பதற்றம் நிலவுகிறது.



Thank You

Related Posts

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – Kumudam

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – மதுகேசவ் பொற்கண்ணன் வாழ்க்கை மிக அழகானது. இயல்பானதும்கூட. அதுசரி, வாழ்க்கையை எப்படி அழகாக வாழ்வது? இதுவொரு கடினமான கேள்வி. இதற்கு இலகுவான பதில் பாரதியிடம் இருக்கிறது. ‘அன்பென்று கொட்டு முரசே; அதில் ஆக்கம் உண்டாம்’…

மறை நீர் என்றால் என்ன? பதில் சொல்கிறார் கோ.லீலா – Kumudam

மறை நீர் என்றால் என்ன? பதில் சொல்கிறார் கோ.லீலா – மானா பாஸ்கரன் ‘நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு’ என்ற வள்ளுவன் சொல். கூடவே, ‘மழை பெய்வது பொதுநலம்; குடை பிடிப்பது சுயநலம்’ என்று சொன்ன தந்தை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

காற்றில் கலக்கும் பிளாஸ்டிக்.. முந்தைய கணிப்புகளை உடைக்கும் புதிய ஆய்வு முடிவுகள்! | Shocking Study Land Releases 20x More Microplastics Into Air Than Oceans

  • By admin
  • April 27, 2026
  • 14 views
காற்றில் கலக்கும் பிளாஸ்டிக்.. முந்தைய கணிப்புகளை உடைக்கும் புதிய ஆய்வு முடிவுகள்! | Shocking Study Land Releases 20x More Microplastics Into Air Than Oceans

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – Kumudam

  • By admin
  • April 27, 2026
  • 10 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – Kumudam

மலேசியா கார் ரேஸில் அஜித்குமார் கார் பழுது: ரசிகர்கள் அப்செட் – Kumudam

  • By admin
  • April 27, 2026
  • 4 views
மலேசியா கார் ரேஸில் அஜித்குமார் கார் பழுது: ரசிகர்கள் அப்செட் – Kumudam

ஈரான், அமெரிக்கா 2-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் அடுத்த வாரம் நடக்கிறது ? – Kumudam

  • By admin
  • April 27, 2026
  • 11 views
ஈரான், அமெரிக்கா 2-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் அடுத்த வாரம் நடக்கிறது ? – Kumudam

மறை நீர் என்றால் என்ன? பதில் சொல்கிறார் கோ.லீலா – Kumudam

  • By admin
  • April 26, 2026
  • 5 views
மறை நீர் என்றால் என்ன? பதில் சொல்கிறார் கோ.லீலா – Kumudam

சென்னை டூ திருச்சி வெறும் 2 மணி நேரம் தான்.. ஜெட் வேகத்தில் புல்லட் ரயில்.. சூப்பர் அப்டேட்!

  • By admin
  • April 26, 2026
  • 9 views
சென்னை டூ திருச்சி வெறும் 2 மணி நேரம் தான்.. ஜெட் வேகத்தில் புல்லட் ரயில்.. சூப்பர் அப்டேட்!
.site-info { display: none; }