மலேசியா கார் ரேஸில் அஜித்குமார் கார் பழுது: ரசிகர்கள் அப்செட் – Kumudam

நடிகர் அஜித்குமார் சமீப காலமாக சர்வதேச கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார் துபாயில் நடந்த கார் ரேஸில் அவரது அஜித்குமார் ரேஸிங் அணி 3வது இடம் பிடித்து சாதித்தது. அதன்பிறகு, போர்ச்சுக்கல் மற்றும் இத்தாலியில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு அசத்தினார்.

சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் நடந்த 24 மணி நேர கார் ரேஸில் 3வது இடத்தை பிடித்தார். அடுத்த ஆண்டு அபுதாபியில் நடக்கும் கார் ரேஸில் அஜித் குமார் ரேஸிங் அணி பங்கேற்கிறது. இந்நிலையில், தற்போது மலேசியாவில் நடக்கும் கார் ரேஸில் அஜித் குமார் ரேஸிங் அணி பங்கேற்றது.

2025 – 2026 ஆண்டுக்கான ASIAN LEMANS SERIES 3 நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மலேசியாவில் நடைபெற்ற கார் ரேஸில் நடிகர் அஜித் குமார் தலைமையிலான அணி களமிறங்கியது. அஜித் பங்கேற்கிறார் என்றதுமே அங்குள்ள ஸ்டேடியத்தில் உள்ள டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன.

அஜித் கார் ரேஸ் ஓட்டுவதை பார்க்க இன்று காலை முதலே ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். போட்டி தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே அஜித் குமார் கார் ஓடுதளத்தில் பழுதாகி நின்றது. உடனே அதை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அஜித் குமார் கூறுகையில், ‘இதில் கவலைப்பட ஒன்றுமில்லை. பந்தயம் என்றால் இப்படித்தான் இருக்கும். அது சோர்வடைய செய்கிறது என்றாலும், எப்போதும் இன்னொரு போட்டி இருக்கும்’ என்றார்.

Thank You

Related Posts

Nethu Lyrics |Nethu Video | தனுஷ் | சந்தோஷ் நாராயணன் கார்த்திக் சுப்பராஜ் – அகதமிழ்

பாடலின் பெயர் : நேத்து ஆல்பத்தின் பெயர் : ஜகமே தந்திரம் பாடல் வரிகள் : தனுஷ் பாடியவர் : தனுஷ் நடிப்பு – தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர். கார்த்திக் சுப்புராஜ்…

AI தொழில்நுட்பம் ஆபாச வீடியோ, போட்டோக்கள் :பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா வேதனை – Kumudam

சக நடிகைகளும் இதேபோன்ற பாதிப்புக்கு உள்ளாவதால், அவர்களின் சார்பாகவும் இந்தப் பதிவை வெளியிடுவதாக அவர் கூறியுள்ளார். ஸ்ரீலீலாவின் ஆதங்கமும் தொழில்நுட்பம் குறித்த கருத்தும் தெலுங்கில் பிரபல நடிகையாக உள்ள ஸ்ரீலீலா, தமிழில் ‘பராசக்தி’ படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார். இந்தத் திரைப்படம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

காற்றில் கலக்கும் பிளாஸ்டிக்.. முந்தைய கணிப்புகளை உடைக்கும் புதிய ஆய்வு முடிவுகள்! | Shocking Study Land Releases 20x More Microplastics Into Air Than Oceans

  • By admin
  • April 27, 2026
  • 14 views
காற்றில் கலக்கும் பிளாஸ்டிக்.. முந்தைய கணிப்புகளை உடைக்கும் புதிய ஆய்வு முடிவுகள்! | Shocking Study Land Releases 20x More Microplastics Into Air Than Oceans

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – Kumudam

  • By admin
  • April 27, 2026
  • 10 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – Kumudam

மலேசியா கார் ரேஸில் அஜித்குமார் கார் பழுது: ரசிகர்கள் அப்செட் – Kumudam

  • By admin
  • April 27, 2026
  • 4 views
மலேசியா கார் ரேஸில் அஜித்குமார் கார் பழுது: ரசிகர்கள் அப்செட் – Kumudam

ஈரான், அமெரிக்கா 2-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் அடுத்த வாரம் நடக்கிறது ? – Kumudam

  • By admin
  • April 27, 2026
  • 11 views
ஈரான், அமெரிக்கா 2-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் அடுத்த வாரம் நடக்கிறது ? – Kumudam

மறை நீர் என்றால் என்ன? பதில் சொல்கிறார் கோ.லீலா – Kumudam

  • By admin
  • April 26, 2026
  • 5 views
மறை நீர் என்றால் என்ன? பதில் சொல்கிறார் கோ.லீலா – Kumudam

சென்னை டூ திருச்சி வெறும் 2 மணி நேரம் தான்.. ஜெட் வேகத்தில் புல்லட் ரயில்.. சூப்பர் அப்டேட்!

  • By admin
  • April 26, 2026
  • 9 views
சென்னை டூ திருச்சி வெறும் 2 மணி நேரம் தான்.. ஜெட் வேகத்தில் புல்லட் ரயில்.. சூப்பர் அப்டேட்!
.site-info { display: none; }