டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தை இழந்த வருண் சக்கரவர்த்தி





வருண் சக்கரவர்த்தி


– விளம்பரம் –

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக டி20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய டி20 அணிக்கு கம்பேக் கொடுத்த வருண் சக்கரவர்த்தி அப்படி தனக்கு கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு தொடர்ச்சியாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தனது முதலிடத்தை இழந்த வருண் சக்கரவர்த்தி :

அதன் காரணமாக குறுகிய காலத்திலேயே நிறைய விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர் டி20 போட்டிகளின் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கும் சென்றார். அதனை தொடர்ந்து நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்துவார் என்று பலராலும் பேசப்பட்ட வருண் சக்கரவர்த்தி நடைபெற்று முடிந்த இந்த டி20 உலக கோப்பை தொடரில் 14 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

– விளம்பரம் –

இருந்தாலும் முக்கிய போட்டிகளின் போது அதிகப்படியான ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். அவரது செயல்பாடு எதிர்பார்த்த அளவை விட சற்று மந்தமாகவே இருந்தது. இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடர் முடிந்த கையோடு வெளியான ஐசிசி தரவரிசை பட்டியலில் தனது முதல் இடத்தை தற்போது இழந்துள்ள வருண் சக்கரவர்த்தி 740 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு சரிந்துள்ளார்.

இப்படி வருண் சக்கரவர்த்தி இரண்டாவது இடத்தை பிடித்துள்ள வேளையில் நம்பர் ஒன் பவுலர் யார்? என்ற கேள்வி பலரது மத்தியிலும் எழுந்திருக்கலாம். அந்த வகையில் அந்த நம்பர் ஒன் இடத்தை பிடித்த வீரராக ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும், கேப்டனுமான ரஷீத் கான் 753 புள்ளிகளை பெற்று முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

– விளம்பரம் –

இதையும் படிங்க : பும்ரா என்னிடம் இருந்து தான் அந்த வித்தையை கத்துக்கிட்டாரு – யு.ஏ.இ வீரர் அளித்த பேட்டி

கடந்த ஆறு மாதங்களாக அசைக்க முடியாத டி20 பந்துவீச்சாளராக இருந்த வருண் சக்கரவர்த்தி ஒரு சிறிய பின்னடைவை சந்தித்த வேளையில் ரஷீத் கான் அவரை தாண்டி முதலிடம் பிடித்துள்ளார். எதிர்வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக வருண் சக்கரவர்த்தியும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ரஷீத் கானும் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்









Thank You

Related Posts

Summer Tour: உள்ளூர் செலவில் உலக சுற்றுலா.! நீலக்கடலும், வெள்ளை வீடுகளும்… கனவு போல ஒரு டூர்!

பழங்கால வரலாறு, கண்ணை கவரும் தீவுகள், உயிரோட்டமான கலாச்சாரம்னு எல்லாம் கலந்த ஒரு கலவைதான் கிரீஸ். ஏதென்ஸின் வரலாற்று சின்னங்கள்ல இருந்து சான்டோரினியின் சன்செட், மைக்கோனோஸின் நைட் லைஃப் வரைக்கும் மறக்க முடியாத அனுபவங்களை கொடுக்கும். வரலாறு, புராணம், பிரமிக்க வைக்கும்…

Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

April 20 Indraya Rasi Palan : இன்றைய ராசி பலன்கள் 20.04.2026 (திங்கள்கிழமை) – மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தினசரி பலன்களை இங்கே விரிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். இன்று நண்பர்களிடமிருந்து நல்ல தகவல் கிடைக்கும். தொலைதூரப் பயணங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

மங்காத்தா vs ஜனநாயகன் : பொங்கலுக்கு அஜித் திரைப்படம் ரீ-ரிலீஸ் : விஜய் உடன் மோத திட்டம் ? – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 6 views
மங்காத்தா vs ஜனநாயகன் : பொங்கலுக்கு அஜித் திரைப்படம் ரீ-ரிலீஸ் : விஜய் உடன் மோத திட்டம் ? – Kumudam

Latest CEH Exam Questions and Answers – Study Online for Certified Ethical Hacker – TN News

  • By admin
  • April 20, 2026
  • 8 views

”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 20, 2026
  • 16 views
”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 20, 2026
  • 18 views
Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 3 views
’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

  • By admin
  • April 20, 2026
  • 7 views
`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்
.site-info { display: none; }