Driest Places: உலகில் மழையே பெய்யாத 5 இடங்கள்.. ஒரு சொட்டு தண்ணீர் கூட விழாதாம்!



Driest Places in the World: இந்த உலகத்தில் மழையே பெய்யாத சில விசித்திரமான இடங்கள் உள்ளன. பல ஆண்டுகளாக ஒரு சொட்டு மழை கூட பெய்யாதாம். இந்த 5 இடங்கள் என்னென்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

இயற்கையின் அதிசயங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தலாம்! இயற்கையை பற்றி தெரிந்துகொள்ளும்போது, உங்கள் ஆர்வம் இன்னும் அதிகமாகும். மழையே பெய்யாத உலகின் 5 விசித்திரமான இடங்களைப் பற்றி இந்த செய்தியில் தெரிந்து கொள்வோம்.

உலகத்தில் பெரும்பாலான மக்கள், வாழ்க்கைக்கேற்ற தட்பவெப்பநிலை, தண்ணீர், காற்று இருக்கிற இடங்களில் தான் வாழுகிறார்கள். ஆனால் நமது பூமியில் சில இடங்களில் ஆண்டுக்கணக்கில் ஒரு சொட்டு மழை கூட பெய்யுறது இல்லை. அப்படிப்பட்ட 5 இடங்கள் இதோ.

நமீபியாவில் உள்ள நமீப் பாலைவனம், அதன் உயரமான செம்மணல் திட்டுகளுக்குப் பெயர் போனது. இங்க வறட்சி அதிகம் என்பதால், விலங்குகள் கடல் பனிமூட்டத்திலிருந்து தண்ணீரை உறிஞ்சி உயிர்வாழ பழகிக்கொண்டன. இந்த பாலைவனம் அட்லாண்டிக் பெருங்கடல் கரையோரம் இருப்பதால், மணல் திட்டுகள் நேரடியாக கடல் அலைகளை சந்திக்கின்றன.ஜோர்டானின் வாடி ரம் பாலைவனம், அதன் செம்மண் மற்றும் மணற்கல் மலைகளால் ஒரு சினிமா செட் போலவே தோற்றமளிக்கிறது. இங்கு மழை மிகவும் அரிது. இரவில் நட்சத்திரங்களுக்குக் கீழே ‘கிளாம்ப்பிங்’ (Glamping) செய்வது உலகப் புகழ்பெற்றது. இதனால்தான் இதை ‘நிலவின் பள்ளத்தாக்கு’ (Valley of the Moon) என்றும் அழைக்கிறார்கள்.அண்டார்டிகாவின் மெக்முர்டோ டிரை வேலிஸில் ஈரப்பதம் மிகக் குறைவாக இருப்பதால், இங்கு பனிக்கட்டிகூட உருவாவதில்லை. இங்குள்ள காற்று மிகவும் குளிராகவும் வறண்டும் இருக்கும். விஞ்ஞானிகள் கருத்துப்படி, இந்த இடம் செவ்வாய் கிரகத்தின் சூழலுக்கு மிகவும் நெருக்கமானது.சிலியில் உள்ள அட்டகாமா பாலைவனம், உலகின் மிக வறண்ட பகுதியாகக் கருதப்படுகிறது. இங்குள்ள வானிலை மையங்கள் இதுவரை ஒரு சொட்டு மழையைக் கூட பதிவு செய்யவில்லை என்றால் நம்புங்க! புவியியலாளர்களுக்கும் சாகசப் பிரியர்களுக்கும் இது ஒரு கனவுலகம்.அமெரிக்காவின் டெத் வேலி, அதன் கொளுத்தும் வெப்பத்திற்கும் கடுமையான வறட்சிக்கும் பெயர் பெற்றது. இங்குள்ள உப்பு சமவெளிகளும் (Salt Pans) வண்ணமயமான மலைகளும் இதை ஒரு அபாயகரமான ஆனால் அழகான சுற்றுலாத் தலமாக மாற்றியுள்ளன.



Thank You

Related Posts

Summer Tour: உள்ளூர் செலவில் உலக சுற்றுலா.! நீலக்கடலும், வெள்ளை வீடுகளும்… கனவு போல ஒரு டூர்!

பழங்கால வரலாறு, கண்ணை கவரும் தீவுகள், உயிரோட்டமான கலாச்சாரம்னு எல்லாம் கலந்த ஒரு கலவைதான் கிரீஸ். ஏதென்ஸின் வரலாற்று சின்னங்கள்ல இருந்து சான்டோரினியின் சன்செட், மைக்கோனோஸின் நைட் லைஃப் வரைக்கும் மறக்க முடியாத அனுபவங்களை கொடுக்கும். வரலாறு, புராணம், பிரமிக்க வைக்கும்…

Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

April 20 Indraya Rasi Palan : இன்றைய ராசி பலன்கள் 20.04.2026 (திங்கள்கிழமை) – மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தினசரி பலன்களை இங்கே விரிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். இன்று நண்பர்களிடமிருந்து நல்ல தகவல் கிடைக்கும். தொலைதூரப் பயணங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 20, 2026
  • 17 views
Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 3 views
’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

  • By admin
  • April 20, 2026
  • 7 views
`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோ… ஆனா இப்போது பாக்,. ஹாக்கி அணியில் வேலை!

  • By admin
  • April 20, 2026
  • 7 views
‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோ… ஆனா இப்போது பாக்,. ஹாக்கி அணியில் வேலை!

ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. 25,000 குடும்பங்கள் வாங்கிய கார் இதுதான்.. எது.?

  • By admin
  • April 20, 2026
  • 7 views
ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. 25,000 குடும்பங்கள் வாங்கிய கார் இதுதான்.. எது.?

Candid Football Conversations #1406 FIFA உலகக் கோப்பை 2026 ஒளிபரப்பு உரிமைகள் இன்னும் இந்தியாவில் விற்கப்படவில்லை!

  • By admin
  • April 20, 2026
  • 9 views
Candid Football Conversations #1406 FIFA உலகக் கோப்பை 2026 ஒளிபரப்பு உரிமைகள் இன்னும் இந்தியாவில் விற்கப்படவில்லை!
.site-info { display: none; }