அக்னி வெயிலுக்கு கொஞ்சம் ரெஸ்ட்.. பூமி குளிர பெய்யப்போகும் கனமழை.. இடி மின்னலும் இருக்காம் கவனம்! – Kumudam


தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திர காலமாக இருப்பதால் பல ஊர்களில் வெப்ப அலை வீசியது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீரின்றி வற்றிப்போய் காணப்பட்டன. கோடை வெப்பத்திற்கு இதமாக பல ஊர்களில் நேற்றைய தினம் பூமி குளிர கனமழை பெய்துள்ளது.  

கடந்த 24 மணி நேரத்தில் கொள்ளிடம் (மயிலாடுதுறை) 7, SRC குடிதாங்கி (கடலூர்), சாத்தியார் (மதுரை)  தலா 5, ஆழியார் (கோயம்புத்தூர்) 4, கிளன்மார்கன் (நீலகிரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), பேரையூர் (மதுரை), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), அண்ணாமலை நகர் (கடலூர்), வனமாதேவி (கடலூர்), மேல் கூடலூர் (நீலகிரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), நடுவட்டம் (நீலகிரி), தொழுதூர் (கடலூர்) தலா 3  செமீ மழை பதிவாகியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட அதிகமாகவும், ஓரிரு  இடங்களில் இயல்பை விட மிக அதிகமாகவும் இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. அதிக பட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 41.2° செல்சியஸ் (+4.9° செல்சியஸ் இயல்பை விட  அதிகம்) பதிவாகியுள்ளது. ஈரோட்டில் 41.0° செல்சியஸ், மதுரையில் (விமான நிலையம்) 40.7° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37° – 39° செல்சியஸ்     பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள்,   புதுவை    மற்றும் காரைக்கால்   பகுதிகளில் 32° – 37° செல்சியஸ்    மற்றும் மலைப் பகுதிகளில் 22° –30°  செல்சியஸ்  பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 37.1° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.4° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல்  ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்றைய தினம் தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள், தேனி, தென்காசி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 

நாளைய தினம் ( மே 10) தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

12ஆம் தேதி தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

இன்று முதல் 13.05.2024 வரை அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழக உள்  மாவட்டங்களில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டியும், ஒருசில இடங்களில் 2°-3°  செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.  

அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 40°–41° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37°–39° செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33°–37° செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்:  09.05.2024 முதல் 13.05.2024 வரை: காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  பிற்பகலில் 45-55% ஆகவும், மற்ற நேரங்களில் 60-85% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 55-85% ஆகவும்  இருக்கக்கூடும்.  அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் லேசானது / மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை  ஏதுமில்லை.



Thank You

Related Posts

அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்  – Kumudam

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 0.9 கிமீ உயரத்தில், வடகிழக்கு பீகார் முதல் தென் தமிழகம் வரை ஜார்க்கண்ட், வடக்கு சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், விதர்பா, மரத்வாடா மற்றும் உள் கர்நாடகா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு…

காற்றழுத்த தாழ்வு பாதை, 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் – Kumudam

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 0.9 கிமீ உயரத்தில், கிழக்கு உத்தரப்பிரதேசம் முதல் தென்தமிழகம் வரை விதர்பா, மரத்வாடா மற்றும் உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (trough) நிலவுகிறது. இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

  • By admin
  • April 19, 2026
  • 3 views
லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 19, 2026
  • 9 views
திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 19, 2026
  • 9 views
நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 15 views
மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

  • By admin
  • April 19, 2026
  • 15 views
அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 10 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam
.site-info { display: none; }