கொளுத்தும் வெயிலுக்கு இடையே கோடை மழை.. கூடவே வீசும் வெப்ப அலை.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம் – Kumudam


தமிழ்நாட்டில் காலை 7 மணிக்கே சூரியன் சுட்டெரிக்க ஆரம்பித்து விடுகிறது. வட மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் கடும் வெப்பம் பதிவாகி வரும் நிலையில் தென் மாவட்டங்களில் ஆங்காங்கே கோடை மழையும் பெய்து மக்களின் மனங்களை குளிர்வித்து வருகிறது. 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): தக்கலை (கன்னியாகுமரி) 5, கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), மாஞ்சோலை (திருநெல்வேலி), சுருளக்கோடு (கன்னியாகுமரி) தலா  3, குழித்துறை (கன்னியாகுமரி), காக்காச்சி (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி) தலா  2, சிற்றாறு-I (கன்னியாகுமரி), சிவலோகம் (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி), போடிநாயக்கனூர் (தேனி), களியல் (கன்னியாகுமரி), ஊத்து (திருநெல்வேலி), விரகனூர் அணை (மதுரை), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) தலா   1.

அதிகபட்ச வெப்பநிலை : கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையில்  பெரிய மாற்றம் எதுவும் இல்லை. அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 2° – 4° செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. ஏனைய  தமிழக சமவெளி பகுதிகள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை  பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.

அதிகபட்ச வெப்பநிலை  ஈரோட்டில் 42.6° செல்சியஸ்,  திருப்பத்தூரில் 42.0° செல்சியஸ், சேலத்தில் 41.6° செல்சியஸ், வேலூரில் 41.5° செல்சியஸ், கரூர் பரமத்தியில் 41.0° செல்சியஸ், தர்மபுரியில்  40.5° செல்சியஸ், திருச்சியில் (விமான நிலையம்) 40.3° செல்சியஸ், மதுரையில் (விமான நிலையம்) 40.2° செல்சியஸ், திருத்தணியில் 40.1° செல்சியஸ், மதுரையில் (நகரம்) &  தஞ்சாவூரில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களில் 38° – 40° செல்சியஸ்    பதிவாகியுள்ளது.

தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35° – 38° செல்சியஸ்    மற்றும் மலைப் பகுதிகளில் 23° –31°  செல்சியஸ்  பதிவாகியுள்ளது.  சென்னை மீனம்பாக்கத்தில் 37.9° செல்சியஸ்  மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.2° செல்சியஸ்   பதிவாகியுள்ளது.

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இன்று 30.04.2024 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

01.05.2024 முதல் 03.05.2024 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.  ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

04.05.2024 முதல் 06.05.2024 வரை:  தமிழகத்தில்  ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய  முன்னறிவிப்பு: 

30.04.2024 முதல் 04.05.2024 வரை: அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழக உள்  மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை  2° செல்சியஸ் வரை  படிப்படியாக உயரக்கூடும்.

30.04.2024 முதல் 04.05.2024 வரை: அடுத்த ஐந்து தினங்களுக்கு, தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°-4°  செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.  01.05.2024 முதல் 03.05.2024 வரை: வட தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  3°-5°  செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 

30.04.2024 முதல் 04.05.2024 வரை: அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39°–43° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38°–40° செல்சியஸ்,  கடலோர தமிழக மாவட்டங்கள்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36°–39° செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்:  30.04.2024 முதல் 04.05.2024 வரை: காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும்  இருக்கக்கூடும். 

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ,    ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம்.

01.05.2024 முதல் 03.05.2024 வரை:  வட  தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.



Thank You

Related Posts

அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்  – Kumudam

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 0.9 கிமீ உயரத்தில், வடகிழக்கு பீகார் முதல் தென் தமிழகம் வரை ஜார்க்கண்ட், வடக்கு சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், விதர்பா, மரத்வாடா மற்றும் உள் கர்நாடகா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு…

காற்றழுத்த தாழ்வு பாதை, 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் – Kumudam

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 0.9 கிமீ உயரத்தில், கிழக்கு உத்தரப்பிரதேசம் முதல் தென்தமிழகம் வரை விதர்பா, மரத்வாடா மற்றும் உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (trough) நிலவுகிறது. இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

  • By admin
  • April 19, 2026
  • 15 views
அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 6 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

ஜகமே தந்திரம் | டிரெய்லர் | தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி | கார்த்திக் சுப்பராஜ் நெட்ஃபிக்ஸ் இந்தியா – அஹதமிழ்

  • By admin
  • April 19, 2026
  • 8 views
ஜகமே தந்திரம் | டிரெய்லர் | தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி | கார்த்திக் சுப்பராஜ் நெட்ஃபிக்ஸ் இந்தியா – அஹதமிழ்

Latest Cisco 350-401 ENCOR Exam Questions and Answers – Study Online Today – TN News

  • By admin
  • April 19, 2026
  • 9 views

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 10 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 7 views
தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam
.site-info { display: none; }