திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு செவ்வாய்கிழமை ஒத்தி வைப்பு : மதுரை உயர்நீதிமன்றம் – Kumudam

கார்த்திகை தீபத்தையொட்டி திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்த நிலையில், இரு அமர்வு நீதிபதிகள் வழக்கை விசாரித்து தள்ளுபடி செய்தனர்.

நேற்று மீண்டும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்ற மலையில் உள்ள தீபத்தூனில் தீபம் ஏற்றுவதோடு, இன்று காலை 10.30 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தார்.

ஆனால் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாமல் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை வரும் திங்கட்கிழமை விசாரிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை மதுரை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மீதான அவதூறு வழக்கு விசாரணை வந்தது. அப்போது வழக்கை செவ்வாய்க்கிழமை ஒத்தி வைக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொள்வதாக ஒத்தி வைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிரொலித்த திருப்பரங்குன்றம் விவகாரம்

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. திமுகவின் மக்களவைக் குழு தலைவர் டி.ஆர். பாலு மற்றும் மாநிலங்களவைக் குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினர். திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் தொடர் முழக்கம் எழுப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்நோக்கத்துடன் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். சபாநாயகர் இருக்கை அருகே சென்று திமுக மற்றும் கூட்டணி எம்.பிக்கள் கடுமையாக கோஷமிட்டு எழுப்பினர்

Thank You

Related Posts

சட்டமன்ற தேர்தல் ஹோட்டல், டீக்கடைகள் மூடல் உணவு கிடைக்காமல் பேச்சுலர்கள் தவிப்பு  – Kumudam

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட உள்ளது. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 37.56 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது. வாக்குபதிவு நடைபெறும் இன்றைய…

அதிகரித்த வாக்குப் பதிவு சதவிகிதம்! ”மே 4 தமிழ்நாடு வெல்லும்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 23, 2026 9:26 PM IST “தமிழ்நாடு வாக்களித்துவிட்டது, மே 4 தமிழ்நாடு வெல்லும்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செய்தி18 தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக 84.69% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “மே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

சட்டமன்ற தேர்தல் ஹோட்டல், டீக்கடைகள் மூடல் உணவு கிடைக்காமல் பேச்சுலர்கள் தவிப்பு  – Kumudam

  • By admin
  • April 24, 2026
  • 13 views
சட்டமன்ற தேர்தல் ஹோட்டல், டீக்கடைகள் மூடல் உணவு கிடைக்காமல் பேச்சுலர்கள் தவிப்பு  – Kumudam

Naakku Chevandhavarae | Naatpadu Theral – 01 | Vairamuthu | Vagu Mazan | Kiruthiga Udhayanidhi – Ahatamil

  • By admin
  • April 24, 2026
  • 7 views
Naakku Chevandhavarae | Naatpadu Theral – 01 | Vairamuthu | Vagu Mazan | Kiruthiga Udhayanidhi – Ahatamil

UPSC CSEயில் தேர்ச்சி பெறுதல்: உங்கள் முழுமையான வழிகாட்டி – TN செய்திகள்

  • By admin
  • April 24, 2026
  • 8 views
UPSC CSEயில் தேர்ச்சி பெறுதல்: உங்கள் முழுமையான வழிகாட்டி – TN செய்திகள்

அதிகரித்த வாக்குப் பதிவு சதவிகிதம்! ”மே 4 தமிழ்நாடு வெல்லும்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 23, 2026
  • 7 views
அதிகரித்த வாக்குப் பதிவு சதவிகிதம்! ”மே 4 தமிழ்நாடு வெல்லும்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

ஆயுஷ் மாத்ரேவுக்கு பதிலா இந்த 2 பேர்ல ஒருத்தரை செலக்ட் பண்ணலாம்

  • By admin
  • April 23, 2026
  • 8 views
ஆயுஷ் மாத்ரேவுக்கு பதிலா இந்த 2 பேர்ல ஒருத்தரை செலக்ட் பண்ணலாம்

சட்டமன்ற தேர்தல் 3 மணி நிலவரம் :   70  சதவிகிதம் வாக்குப்பதிவு, 4 கோடி பேர் வாக்களிப்பு   – Kumudam

  • By admin
  • April 23, 2026
  • 12 views
சட்டமன்ற தேர்தல் 3 மணி நிலவரம் :   70  சதவிகிதம் வாக்குப்பதிவு, 4 கோடி பேர் வாக்களிப்பு   – Kumudam
.site-info { display: none; }