தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்: சாதனை வெற்றிபெற்ற லைகா தமிழ்குமரன் – பதவியேற்ற புது நிர்வாகிகள்!


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இப்போது பொறுப்பில் உள்ளவர்களின் பதவிக்காலம், வருகிற ஏப்ரல் மாதத்தோடு நிறைவு பெறுகிறது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அதனையொட்டி புது நிர்வாகிகளுக்கான (2026 – 2029 ஆண்டிற்கான) தேர்தல், சென்னை அண்ணாநகரில் உள்ள கல்லூரி ஒன்றில் (நேற்று பிப் 22ம் தேதி) நடந்தது. முரளி ராமசாமி தலைமையில் இம்முறை இராம நாராயணன் அணி, ஜி.கே.எம். தமிழ்குமரன் சார்பில் நலம் காக்கும் அணி என இரண்டு அணிகள் போட்டியிட்டன. இதில் நலன் காக்கும் அணியின் தலைவராகப் போட்டியிட்ட தமிழ்குமரன் அணி வெற்றி பெற்றுள்ளது.

நலம் காக்கும் அணியினர்

நலம் காக்கும் அணியினர்

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போதுதான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான சங்கம் உதயமானது. அதற்கு முன்னர் சேம்பர் ஆகத்தான் இருந்தது. தமிழக முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிலிருந்து இப்போது மு.க.ஸ்டாலின் வரை சங்கத்திற்கு பக்கபலமாக இருந்து வருகிறார்கள். முன்பெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடந்தது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முதல் தலைவராக கோவை செழியன் இருந்தார். அதன் பிறகு தயாரிப்பாளர்கள் கே.ஆர்.ஜி., இப்ராஹிம் ராவுத்தர், கே.ஏ.முரளிதரன், டி.ஜி.தியாகராஜன், இராமநாராயணன் மூன்று முறை பதவி வகித்திருக்கிறார். எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், கலைப்புலி தாணு, விஷால், முரளி என்.ராமசாமி எனப் பலரும் தலைவர் பொறுப்பில் இருந்திருக்கிறார்கள்.

இம்முறை தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட தயாரிப்பாளர் ஜி.கே.எம். தமிழ்குமரன் 788 வாக்குகள் பெற்று, 527 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதுவரை நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்றவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அதேபோல பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் 609 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இணைச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் 715 வாக்குகளும் பெற்றுள்ளார். சுயேச்சை வேட்பாளராக செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட ஃபைவ் ஸ்டார் கதிரேசன் 715 வாக்குகள் பெற்று சிறப்பான வெற்றி பெற்றுள்ளார்.

புதிய நிர்வாகிகள்

புதிய நிர்வாகிகள்

சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக… தலைவராக தமிழ்குமரன், துணைத் தலைவர்களாக ஆர்.கே.சுரேஷ், கமலக்கண்ணன், செயலாளர்களாக கதிரேசன், ராதாகிருஷ்ணன் மற்றும் இணைச் செயலாளராக சுஜாதா விஜயகுமாரும், பொருளாளராக என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருடன் செயற்குழு உறுப்பினர்களும் அண்ணாசாலையில் உள்ள ஃபிலிம் சேம்பரில் பதவி ஏற்றுக் கொண்டனர். இன்று பொறுப்பேற்றுக் கொண்ட புது நிர்வாக அணியினர், “தேர்தல் வாக்குறுதியில் சொல்லியிருந்ததை இனி வரும் காலங்களில் நிறைவேற்றுவோம்’ எனத் தெரிவித்துள்ளனர். தேர்தல் வாக்குறுதியின் ஒரு பகுதியாக சங்கத்தின் நிதிப் பற்றாக்குறையைப் போக்க, நட்சத்திர கலை நிகழ்ச்சி நடத்தி நிதியை சேகரிப்போம் என வாக்குறுதி அளித்திருந்தனர். நிர்வாகிகள் பதவி ஏற்றதைத் தொடர்ந்து செயற்குழு கூட்டமும் நடைபெற்றது.

வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்!



Thank You

Related Posts

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 16, 2026 1:34 PM IST விளம்பரங்கள், தயாரிப்பு உறைகள் மற்றும் இணையதளங்களில் அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை தமன்னா வழக்கு தொடர்ந்திருந்தார். செய்தி18 பவர் சோப் நிறுவனத்திற்கு எதிராக நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு…

ஜகமே தந்திரம் | டிரெய்லர் | தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி | கார்த்திக் சுப்பராஜ் நெட்ஃபிக்ஸ் இந்தியா – அஹதமிழ்

தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. Music – Santhosh Narayanan DOP – Shreyaas Krishna Art Directors – T. Santanam, Vinoth Rajkumar (UK) Editor –…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

  • By admin
  • April 19, 2026
  • 3 views
லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 19, 2026
  • 9 views
திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 19, 2026
  • 9 views
நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 16 views
மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

  • By admin
  • April 19, 2026
  • 15 views
அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 12 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam
.site-info { display: none; }