– விளம்பரம் –
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டியானது இன்று அகமதாபாத் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தற்போது இரு அணிகளை வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இறுதிப்போட்டியில் வெற்றிபெற இது ரொம்ப முக்கியம் : சூரியகுமார் யாதவ்
ஏற்கனவே இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்றுள்ள சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படுவதால் மீண்டும் ஒருமுறை இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர். அதேவேளையில் இந்திய அணிக்கு சவால் அளிக்கும் வகையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நியூசிலாந்து அணியும் இந்த ஆட்டத்தில் கடுமையான போட்டியை அளிக்கும் என்பது உறுதி.
– விளம்பரம் –
இதன் காரணமாக இன்றைய போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த மாபெரும் இறுதி போட்டிக்கு முன்னதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பல்வேறு கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்திருந்தார். அந்த வகையில் இந்த இறுதி போட்டியின் போது டாஸ் மிகவும் முக்கியம் என்றும் அவர் சில கருத்துக்களை பகிர்ந்து இருந்தார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த இறுதி போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்தில் பனியின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கும் என்று நான் நினைக்கிறேன். இதன் காரணமாக டாசில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம் என்றும் நினைக்கிறேன். இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் பனிபொழிய அதிக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இரண்டாவது பேட்டிங் செய்தால் கூடுதலாக நன்மை கிடைக்கும்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : கபில் தேவ், தோனி, ரோஹித்துக்கு அடுத்து 4 ஆவது கேப்டனாக மாபெரும் சாதனை நிகழ்த்த – சூர்யகுமாருக்கு வாய்ப்பு
நாங்கள் பலம் வாய்ந்த அணிகளுடன் அதிகமான பனியின் மத்தியில் சர்வதேச போட்டிகளில் விளையாடியிருக்கிறோம். அந்த அனுபவத்தை வைத்து இந்த போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த காட்டுவோம் என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த மாபெரும் இறுதி போட்டியானது இன்று இரவு நடைபெறவுள்ள வேளையில் அனைவரது கவனமும் இந்த போட்டியின் மீதுள்ளது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்