– விளம்பரம் –
கடந்த 2024-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கைப்பற்றி அசத்தியது. அந்த தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.கே.ஆர் அணி மிக வலிமையான அணியாக பார்க்கப்பட்டாலும் அந்த தொடர் முடிந்த கையோடு கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை கொல்கத்தா அணி கழட்டி விட்டது. அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக அஜின்க்யா ரஹானே பொறுப்பேற்றார்.
ரிங்கு சிங்கின் பேட்டிங் ஆர்டர் குறித்து : சுரேஷ் ரெய்னா யோசனை
அவரது தலைமையில் கடந்த 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி பங்கேற்றது. நடப்பு சாம்பியனாக இந்த தொடரில் பங்கேற்ற அந்த அணி மீண்டும் ஒருமுறை அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தும் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்த வேளையில் கடந்த ஆண்டு மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய கொல்கத்தா அணி தொடரில் இருந்து வெகு விரைவாக வெளியேறியிருந்தது.
– விளம்பரம் –
அதனால் இந்த ஆண்டு மீண்டும் சிறப்பான கம்பேக் கொடுக்கும் முயற்சியில் தற்போது கொல்கத்தா அணி வீரர்கள் பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் எதிர்வரும் இந்த 2026 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் பேட்டிங் ஆர்டர் வலிமை பெற வேண்டுமெனில் ரிங்கு சிங் முன்கூட்டியே களத்திற்கு வரவேண்டும் என முன்னாள் இந்திய வீரரான சுரேஷ் ரெய்னா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரன் ரேட் சிறப்பாக அமையவில்லை.
ரஹானே மேல் வரிசையில் மிகச் சிறப்பாக விளையாடினாலும் மிடில் ஆர்டரில் அவர்களுக்கு போதுமான அளவில் ரன்கள் வரவில்லை. ஆண்ட்ரே ரசல், ரிங்கு சிங், ரமன்தீப் சிங் என அதிரடி பேட்ஸ்மேன்கள் அனைவரும் கீழ் வரிசையில் வந்தார்கள். எனவே இம்முறை ரிங்கு சிங்கை நான் மேல் வரிசையில் பேட்டிங் செய்ய பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். ஏனெனில் நான்காவது இடத்தில் ரிங்கு சிங்கை விளையாட வைத்தால் அந்த அணியின் ரன் ரேட் சிறப்பாக இருக்கும்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : சதமடிக்க ஆசைதான் ஆனா.. 3 சதங்களை தவறவிட்டது குறித்து பேசிய சஞ்சு சாம்சன் – விவரம் இதோ
பந்தை பார்த்து சுழற்றக்கூடிய சாதாரண பேட்ஸ்மேன் ரிங்கு சிங் கிடையாது. அவர் ஒரு முறையான பேட்ஸ்மேன். அவரால் நிச்சயம் ஒரு பெரிய இன்னிங்க்ஸை விளையாடி அணியை நல்ல ரன் குவிப்பிற்கு அழைத்துச் செல்ல முடியும். எனவே இம்முறை கொல்கத்தா அணி ரிங்கு சிங்கை டாப் ஆர்டரில் பயன்படுத்த வேண்டும் என சுரேஷ் ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்