– விளம்பரம் –
இந்தியாவில் நேற்று துவங்கிய 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன.
பொல்லார்டின் சாதனையை முறியடித்த சுனில் நரேன் :
அதன்படி சற்றுமுன் துவங்கிய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
– விளம்பரம் –
இந்நிலையில் இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பாக விளையாடும் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரேன் முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரரான கைரன் பொல்லார்டின் மாபெரும் சாதனை ஒன்றினை தகர்த்துள்ளார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அந்த வகையில் சுனில் நரேன் இந்த போட்டியில் நிகழ்த்தியுள்ள சாதனை யாதெனில் : ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாட்டு வீரராக அதிக போட்டிகளில் விளையாடிய வீரராக கைரன் பொல்லார்டு 189 போட்டிகளில் விளையாடி முதலிடத்தில் இருந்தார். மும்பை அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான அவர் மும்பை அணிக்காக மட்டுமே 189 போட்டியில் விளையாடி முதலிடத்திலும், அதற்கடுத்து ஏ.பி.டி மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் தலா 184 போட்டியுடன் இரண்டாவது இடத்தில் இருந்தனர்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : நான் சொல்லிகிட்டே இருந்தேன்.. அதுக்குள்ள அவுட்.. அபிஷேக் சர்மா செய்யும் தவறு குறித்து – அஷ்வின் விமர்சனம்
இவ்வேளையில் இன்றைய போட்டியில் கொல்கத்தா அணிக்காக இடம்பெற்றுள்ள சுனில் நரைன் ஐ.பி.எல் போட்டிகளில் தனது 190 ஆட்டத்தில் பங்கேற்று விளையாடி வருகிறார். இதன்மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் அதிக ஆட்டங்களில் விளையாடிய வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை சுனில் நரேன் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்