– விளம்பரம் –
இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக டிரேடிங் முறையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனை சி.எஸ்.கே அணி தங்களது அணிக்குள் கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரையும் சி.எஸ்.கே அணி ராஜஸ்தான் அணிக்கு விட்டுக் கொடுத்தது. தொனிக்கு அடுத்து சி.எஸ்.கே அணியின் நிரந்தர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சன் பார்க்கப்படுகிறார்.
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு தெரிவித்த : ஸ்டீபன் பிளமிங்
தற்போது சஞ்சு சாம்சன் இம்முறை சி.எஸ்.கே அணிக்காக விளையாடி வருவதால் அவரது பேட்டிங் எவ்வாறு இருக்கப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் நிலவி வருகிறது. டி20 உலக கோப்பை தொடரின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் இறுதிக்கட்ட போட்டிகளில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். எனவே அதே பார்மை சென்னை அணியிலும் வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
– விளம்பரம் –
ஆனால் சி.எஸ்.கே அணியில் தான் விளையாடிய முதல் இரண்டு போட்டியில் அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்துள்ளார். அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 6 ரன்களையும் நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 7 ரன்களை மட்டுமே அடித்துள்ள அவர் 2 போட்டியில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான சரிவை சந்தித்துள்ளார்.
இதன் காரணமாக அவரது பேட்டிங் ஃபார்ம் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன. இந்நிலையில் சி.எஸ்.கே அணியில் புதிதாக இணைந்து விளையாடி வரும் சஞ்சு சாம்சன் ஆதரவு தெரிவித்து பேசியுள்ள சென்னை அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங் கூறுகையில் : இது டி20 கிரிக்கெட். ஒவ்வொரு போட்டியிலும் எல்லா வீரர்களும் ரன் அடிக்க முடியாது. இரண்டு மோசமான இன்னிங்ஸ்களை வைத்து சஞ்சு சாம்சனை ஜட்ஜ் பண்ண வேண்டாம்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : பஞ்சாப் கிங்ஸ் அணியில் என்னுடைய ரோல் இதுதான்.. அதை நான் தொடர்ந்து செய்வேன் – கூப்பர் கானோலி அதிரடி
அவர் தற்போது நல்ல பேட்டிங் ஃபார்மில் உள்ளார். விரைவில் அவர் பெரிய இன்னிங்ஸ்சை சென்னை அணிக்காக விளையாடுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை அணி தங்களது சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் நேற்று அடைந்த தோல்வியின் மூலம் தொடர்ந்து 6 தோல்வியை அந்த மைதானத்தில் சந்தித்துள்ளது. இதற்கு அடுத்து நாளை சி.எஸ்.கே அணி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்.சி.பி அணியை எதிர்த்து விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்