பிரதமர் மோடி வருகையையொட்டி திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பலத்த பாதுகாப்பு! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

மதுரை விமான நிலையம் முதல் திருப்பரங்குன்றம் கோயில் வரை பிரதமர் பயணிக்கும் வழிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

செய்தி18
செய்தி18

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு பிரதமர் மோடி வருவதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, முன்னதாக மாலை 4 மணியளவில் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய உள்ளார். கோயில் வாசலில் இருந்து கருவறை வரை 150 மீட்டருக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கம்பத்தடி மண்டபத்தில் உள்ள அலுவலக அறை முன் வைக்கப்பட்டுள்ள சிம்மாசனத்தில் அமர வைக்கப்பட்டு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட உள்ளது.

பிரதமர் வருகையை யொட்டி பக்தர்களுக்கு எந்தவித தடையும் இல்லை எனவும் வழக்கம்போல் காலை 5 மணி முதல் ஒரு மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் மாலை பிரதமர் மோடி வழிபாடு செய்த பின்பு 5 மணி அளவில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் வருகையை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயிலைச் சுற்றி செல்போன் சிக்னலைத் தடுக்கும் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. பலத்த சோதனைக்குப் பிறகே பக்தர்கள் கோயிலின் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மதுரை விமான நிலையம் முதல் திருப்பரங்குன்றம் கோயில் வரை பிரதமர் பயணிக்கும் வழிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Thank You

Related Posts

சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு விறுவிறு : 1 மணி வரை 56.81 சதவிகிதம் வாக்கு பதிவு  – Kumudam

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 2.80 கோடி, பெண் வாக்காளர்கள் 2.93 கோடி, மூன்றாம் பாலினத்தவர்கள் 7,728 பேர். முதல் முறை…

தமிழகத்தில் ரூ.1262 கோடி பணம் பரிசுப்பொருட்கள் பறிமுதல், 5.73 கோடி வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம் தகவல்  – Kumudam

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளரை சந்தித்த அவர் தமிழக சட்டசபை தேர்தல் பணிகளில் 3.60 லட்சம் பேரும், பாதுகாப்பு பணியில் 83 ஆயிரம் பேரும் ஈடுபட்டுள்ளனர்; 300 கம்பெனி துணை ராணுவம் தமிழகம் வரவழைக்கப்பட்டுள்ளன. 14.59 லட்சம் முதல் முறை வாக்காளர்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு விறுவிறு : 1 மணி வரை 56.81 சதவிகிதம் வாக்கு பதிவு  – Kumudam

  • By admin
  • April 23, 2026
  • 4 views
சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு விறுவிறு : 1 மணி வரை 56.81 சதவிகிதம் வாக்கு பதிவு  – Kumudam

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

  • By admin
  • April 23, 2026
  • 5 views
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

Trisha | “கண்டிப்பாக அனைவரும்…” – வாக்களித்த பின் நடிகை திரிஷா கூறியது… என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 23, 2026
  • 5 views
Trisha | “கண்டிப்பாக அனைவரும்…” – வாக்களித்த பின் நடிகை திரிஷா கூறியது… என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

மாஸ்டரிங் NEET PG: வெற்றிக்கான வழிகாட்டி – TN செய்திகள்

  • By admin
  • April 23, 2026
  • 13 views
மாஸ்டரிங் NEET PG: வெற்றிக்கான வழிகாட்டி – TN செய்திகள்

2018-க்குப் பிறகு இந்தியா வந்த பாக்,. அணி: ‘அழுத்தம் அதிகமிருக்கும்’

  • By admin
  • April 23, 2026
  • 9 views
2018-க்குப் பிறகு இந்தியா வந்த பாக்,. அணி: ‘அழுத்தம் அதிகமிருக்கும்’

பையநாடு ஒரு குளமாக மாறுகிறது, ஆனால் மலப்புரம் மற்றொரு டிராவில் குடியேறுகிறது

  • By admin
  • April 23, 2026
  • 6 views
பையநாடு ஒரு குளமாக மாறுகிறது, ஆனால் மலப்புரம் மற்றொரு டிராவில் குடியேறுகிறது
.site-info { display: none; }