தாய் கிழவி: "நான் யாருக்கும் போட்டியாகவோ, காலி பண்ணவோ வரல. என்னை விட்ருங்க!" – சிவகார்த்திகேயன்


சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (பிப்.23) நடைபெற்றிருக்கிறது.

‘தாய் கிழவி' படத்தில்
‘தாய் கிழவி’ படத்தில்

நான் யாருக்கும் போட்டியாகவோ.!

இதில் கலந்துகொண்டு பேசிய சிவகார்த்திகேயன், ” நாங்கள் எல்லோரும் ஒரு கனவுடன் தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். நான் ஆசையோடு இங்கு (சினிமா) வந்திருக்கிறேன்.

நிறைய பேருக்கு கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ள ஒன்றாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

எனக்கு பெயரையும், புகழையும் கொடுத்த இண்டஸ்ட்ரிக்கு நானும் திரும்பக்கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் இதுபோன்ற படங்களைத் தயாரிக்கிறேன். நான் யாருக்கும் போட்டியாகவோ, யாரையும் காலி பண்ணவோ வரவில்லை.

எனக்கு நிறைய மைனஸ் இருக்கிறது, ஆனால்.!

எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பையும், வாழ்க்கையையும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்காக என்னை விட்டுவிடுங்கள். இந்த மாதிரி திறமையுள்ள கலைஞர்களுடன் படம் பண்ணும்போது நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன்.

இதுவரை நான் ரீமேக் படங்களில் நடித்தது இல்லை. கதை கேட்டு தான் படத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய படங்களின் வெற்றி, தோல்வி இரண்டுக்குமே நான் தான் பொறுப்பு.

எனக்கு நிறைய மைனஸ் இருக்கிறது. அதையெல்லாம் ப்ளஸ்ஸாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்து வருகிறேன். நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள என்னுடைய தயாரிப்பில் வெளியாகும் படங்களும் உதவியாக இருக்கின்றன.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

இண்டஸ்ட்ரியில் இருக்கும் சிலர் தான் எனக்கு.!

மக்கள் ஆரம்பத்தில் இருந்து சப்போர்ட் செய்து வருகிறார்கள். திருச்சியில் இருந்து வந்த ஒருவனை இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இண்டஸ்ட்ரியில் இருக்கும் சிலர் தான் அதற்கு தடைகளைப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

அதைத் தாண்டி வர நான் தயாராகத்தான் இருக்கிறேன். அப்படி தடைகளைத் தாண்டி வரும்போது சிவகுமார் முருகேசன் (தாய்கிழவி இயக்குநர்) மாதிரியான நான்கு நபர்களை இந்தத் துறைக்கு தேடிக்கொண்டு வருவேன்” என்று பேசியிருக்கிறார்.



Thank You

Related Posts

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 16, 2026 1:34 PM IST விளம்பரங்கள், தயாரிப்பு உறைகள் மற்றும் இணையதளங்களில் அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை தமன்னா வழக்கு தொடர்ந்திருந்தார். செய்தி18 பவர் சோப் நிறுவனத்திற்கு எதிராக நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு…

ஜகமே தந்திரம் | டிரெய்லர் | தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி | கார்த்திக் சுப்பராஜ் நெட்ஃபிக்ஸ் இந்தியா – அஹதமிழ்

தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. Music – Santhosh Narayanan DOP – Shreyaas Krishna Art Directors – T. Santanam, Vinoth Rajkumar (UK) Editor –…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

  • By admin
  • April 19, 2026
  • 3 views
லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 19, 2026
  • 8 views
திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 19, 2026
  • 7 views
நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 15 views
மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

  • By admin
  • April 19, 2026
  • 15 views
அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 10 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam
.site-info { display: none; }