“என் கணவருடைய இந்த நிலைமைக்கு ஸ்ட்ரெஸ் தான் மெயின் காரணம்!” – ரிச்சர்ட் மனைவி |”Stress is the main reason for my husband’s current condition!” — Richard’s wife

பாடகர் ரிச்சர்ட் உடல்நிலை குறித்து நம்மிடையே பேசிய அவருடைய மனைவி, “என்னுடைய கணவருக்குக் கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பக்கவாதம் (Stroke) ஏற்பட்டுச்சு.

அப்போதிருந்து எங்களுக்குக் கடினமான காலம் தொடங்கிடுச்சு. அதுல இருந்து நாங்க ரொம்பக் கஷ்டப்பட்டுட்டு இருக்கோம். என்னுடைய கணவர் ஹிட் பாடல்கள் பாடியிருக்கார்.

ஆனா, இவர் பாடின பாடல்கள் பற்றிக்கூட யாருக்கும் தெரியாது. சொல்லப்போனால், இவரொரு பாடகர் என்பதே நிறைய பேருக்குத் தெரியாது. ஏன்னா, இதைப் பற்றி வெளில தெரியப்படுத்த வேண்டாம்னு இருந்துட்டாரு. அவரும் அதைத் தெரியப்படுத்தணும்னு விரும்பல.

ரிச்சர்ட் - பின்னணி பாடகர்

ரிச்சர்ட் – பின்னணி பாடகர்

‘எங்கேயும் காதல்’ படத்துல வர்ற ‘நங்கை’, ‘ரெமோ’ படத்துல வர்ற ‘மீச பியூட்டி’, ‘நண்பேண்டா’ படத்துல வர்ற ‘நீ சன்னோ’ போன்ற பாடல்களைப் பாடினது என்னுடைய கணவர்தான். இதைத்தவிர, தெலுங்கு மொழியிலும் சில பாடல்களைப் பாடியிருக்காரு.

ஆனா, இது வெளிய தெரியணும்னு அவர் நினைச்சதே இல்ல. எங்களுக்குப் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் இருந்தபோதும், இந்த விஷயத்தை அவர் வெளிப்படுத்திக்கல” என்றவர், “என் கணவரை வந்து பார்த்து கே.பி.ஒய் பாலா சார் எங்களுக்காக உதவிகள் செய்திருந்தார்.

அவரைப் போல இன்னும் சிலர் போன் பண்ணிப் பேசினாங்க. ஆனா, நேரடியா யாரும் வந்து இதுவரைக்கும் பார்க்கல. நாங்களும் உதவிகள் கிடைக்கும்னு நம்பிக்கையோட இருக்கோம்.

Thank You

Related Posts

‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா: ஏப்ரல் 26 மதுரையில் நடக்கிறது – Kumudam

கருப்பு திரைப்படம் முழுக்க முழுக்க பக்கா கமர்சியல் திரைப்படமாக உருவாகியுள்ளது. ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். கருப்பு திரைப்படத்தை பண்டிகை நாளில் வெளியிடவே படக்குழு திட்டமிட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.…

Ajith | தமிழகத்தின் முதல் ஓட்டு… 7 மணிக்கு முன்பாகவே வாக்களித்த நடிகர் அஜித்… காரணம் என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 23, 2026 7:41 AM IST Ajith | தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், முதல் ஆளாக நடிகர் அஜித் குமார் திருவான்மியூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். செய்தி18 தமிழ்நாட்டில் உள்ள 234…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

எண்ணெய் மட்டும் அல்ல.. பாராசிட்டமால் விலை 4 மடங்கு உயர்வு.. ஹார்முஸ் நெருக்கடியால் வந்த விளைவு

  • By admin
  • April 25, 2026
  • 5 views
எண்ணெய் மட்டும் அல்ல.. பாராசிட்டமால் விலை 4 மடங்கு உயர்வு.. ஹார்முஸ் நெருக்கடியால் வந்த விளைவு

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 4 – Kumudam

  • By admin
  • April 25, 2026
  • 7 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 4 – Kumudam

“என் கணவருடைய இந்த நிலைமைக்கு ஸ்ட்ரெஸ் தான் மெயின் காரணம்!” – ரிச்சர்ட் மனைவி |”Stress is the main reason for my husband’s current condition!” — Richard’s wife

  • By admin
  • April 25, 2026
  • 9 views
“என் கணவருடைய இந்த நிலைமைக்கு ஸ்ட்ரெஸ் தான் மெயின் காரணம்!” – ரிச்சர்ட் மனைவி |”Stress is the main reason for my husband’s current condition!” — Richard’s wife

எந்த போட்டியில் தோனி களமிறங்குவார்? சிஎஸ்கே அணி நிர்வாகம் புது அப்டேட்  – Kumudam

  • By admin
  • April 25, 2026
  • 12 views
எந்த போட்டியில் தோனி களமிறங்குவார்? சிஎஸ்கே அணி நிர்வாகம் புது அப்டேட்  – Kumudam

தடுமாறி வரும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு மிட்சல் ஸ்டார்க் மூலம் வந்த நற்செய்தி

  • By admin
  • April 24, 2026
  • 7 views
தடுமாறி வரும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு மிட்சல் ஸ்டார்க் மூலம் வந்த நற்செய்தி

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 5 – Kumudam

  • By admin
  • April 24, 2026
  • 17 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 5 – Kumudam
.site-info { display: none; }