தடுமாறி வரும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு மிட்சல் ஸ்டார்க் மூலம் வந்த நற்செய்தி

மிட்செல் ஸ்டார்க்

– விளம்பரம் –

கடந்த மார்ச் 28-ஆம் தேதி இந்தியாவில் துவங்கிய நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 19 சீசனானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று எந்த அணி கோப்பையை கைப்பற்றும்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தைத் தொட்டுள்ளது.

டெல்லி அணிக்கு திரும்பும் மிட்சல் ஸ்டார்க் :

இந்த தொடரின் பாதி போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள வேளையில் ஒவ்வொரு போட்டியுமே மிக பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த தொடரில் முக்கிய நட்சத்திர வீரர்கள் பலர் காயம் காரணமாக விளையாட முடியாமல் இருப்பது அந்தந்த அணிகளுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

– விளம்பரம் –

அவ்வகையில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் இந்த தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளை தவறவிட்டது அந்த அணிக்கும் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில் இந்த தொடரில் ஓரளவு சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் டெல்லி அணிக்கு இறுதி கட்ட ஓவர்களின் போது ரன்களை கட்டுப்படுத்தக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் அந்த அணி தடுமாறி வருகிறது.

இவ்வேளையில் அந்த பாதிப்பை சரி செய்யும் வகையில் தற்போது மிட்சல் ஸ்டார்க் தரப்பிலிருந்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த வகையில் காயத்திலிருந்து முழுமையாக வெளிவந்துள்ள மிட்சல் ஸ்டார்க் ஐ.பி.எல் தொடரில் விளையாட தடையில்லா சான்றிதழை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வழங்கியுள்ளது.

– விளம்பரம் –

இதையும் படிங்க : எப்போது தோனி மீண்டும் சி.எஸ்.கே அணியின் பிளேயிங் லெவனுக்கு திரும்புவார் – உண்மையை சொன்ன ஹஸி

இதன் காரணமாக அவர் விரைவில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியுடன் இணைந்து மே ஒன்றாம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்று தெரிகிறது. கடந்த சீசனின் போது 11 போட்டிகளில் விளையாடிய அவர் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Thank You

Related Posts

ஏர்கூலர்ல இருந்து பேட் ஸ்மெல் வருதா? இந்த ஒரு பொருளை மட்டும் மாத்துங்க.! செலவே இல்லாமல் சரி செய்யலாம்.! துர்நாற்றத்திற்கு முற்றுப்புள்ளி.!

How to Remove Air Cooler Smell in Tamil :  நம் வீட்டில் இருக்கும் ஏர் கூலரிலிருந்து சில சமயம் வித்தியாசமான வாசனை மற்றும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த பிரச்சனைக்கு வீட்டிலேயே நம்மால் எளிதாக தீர்வு காண முடியும். அது…

கிரிஸ் கெயில் மற்றும் ஆண்ட்ரே ரசலுக்கு அடுத்து 3 ஆவது வீரராக ஹென்றிச் கிளாஸன் – நிகழ்த்திய சாதனை

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில் விளையாடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது டெல்லி அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

தடுமாறி வரும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு மிட்சல் ஸ்டார்க் மூலம் வந்த நற்செய்தி

  • By admin
  • April 24, 2026
  • 4 views
தடுமாறி வரும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு மிட்சல் ஸ்டார்க் மூலம் வந்த நற்செய்தி

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 5 – Kumudam

  • By admin
  • April 24, 2026
  • 15 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 5 – Kumudam

‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா: ஏப்ரல் 26 மதுரையில் நடக்கிறது – Kumudam

  • By admin
  • April 24, 2026
  • 7 views
‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா: ஏப்ரல் 26 மதுரையில் நடக்கிறது – Kumudam

கர்நாடக நில பதிவுகள்: உங்கள் அத்தியாவசிய வழிகாட்டி – TN செய்திகள்

  • By admin
  • April 24, 2026
  • 9 views
கர்நாடக நில பதிவுகள்: உங்கள் அத்தியாவசிய வழிகாட்டி – TN செய்திகள்

ஏர்கூலர்ல இருந்து பேட் ஸ்மெல் வருதா? இந்த ஒரு பொருளை மட்டும் மாத்துங்க.! செலவே இல்லாமல் சரி செய்யலாம்.! துர்நாற்றத்திற்கு முற்றுப்புள்ளி.!

  • By admin
  • April 24, 2026
  • 10 views
ஏர்கூலர்ல இருந்து பேட் ஸ்மெல் வருதா? இந்த ஒரு பொருளை மட்டும் மாத்துங்க.! செலவே இல்லாமல் சரி செய்யலாம்.! துர்நாற்றத்திற்கு முற்றுப்புள்ளி.!

வளிமண்டல கீழடு சுழற்சி, தமிழ்நாட்டில் மிதமான மழை வாய்ப்பு : வானிலை மையம்  – Kumudam

  • By admin
  • April 24, 2026
  • 6 views
வளிமண்டல கீழடு சுழற்சி, தமிழ்நாட்டில் மிதமான மழை வாய்ப்பு : வானிலை மையம்  – Kumudam
.site-info { display: none; }