டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில் விளையாடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது டெல்லி அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் ஏழு ஆட்டங்களில் 4 வெற்றிகளை கைப்பற்றி சன் ரைசர்ஸ் அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேவேளையில் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்த டெல்லி 6 போட்டிகளில் மூன்றாவது தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு சென்றுள்ளது.
ஹென்றிச் கிளாஸன் நிகழ்த்திய சாதனை :
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்களை குவித்தது. பின்னர் 243 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 195 ரன்கள் மட்டுமே குவித்ததால் 47 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது சன் ரைசர்ஸ் அணி சார்பாக விளையாடிய அதிரடி வீரரான ஹென்றிச் கிளாசன் 13 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 284 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 37 ரன்கள் குவித்து அசத்தினார். அவர் இந்த போட்டியில் அடித்த மூன்று சிக்ஸர்களின் மூலம் ஐபிஎல் போட்டிகளில் ஒரு மாபெரும் சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் இரண்டாவது சிக்சரை விளாசும் போது அவர் ஐபிஎல் போட்டிகளில் 100 சிக்ஸர்களை பூர்த்தி செய்தார். அதுவும் அவர் விளையாடிய 52-வது இன்னிங்ஸ்லயே பூர்த்தி செய்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் அதிவேகமாக 100 சிக்ஸர்களை அடித்த வீரர்களின் பட்டியலில் கிளாஸன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
இதையும் படிங்க : டி20 போட்டிகளில் விராட் கோலியின் மாபெரும் சாதனையை சமன் செய்த அபிஷேக் சர்மா – விவரம் இதோ
ஏற்கனவே கிரிஸ் கெயில் 37 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் 100 சிக்ஸர்களை அடித்து முதலிடத்திலும், 47 இன்னிங்ஸ்கலில் 100 சிக்ஸர்களை அடித்து ஆண்ட்ரே ரசல் இரண்டாவது இடத்திலும் உள்ள வேளையில் தற்போது 52 இன்னிங்ஸ்களில் 100 சிக்ஸர்களை விளாசி கிளாஸன் அந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பதவி கிரிஸ் கெயில் மற்றும் ஆண்ட்ரே ரசலுக்கு அடுத்து 3 ஆவது வீரராக ஹென்றிச் கிளாஸன் – நிகழ்த்திய சாதனை முதலில் தோன்றியது கிரிக் தமிழ்.