கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தின் (NMACC) 3-வது ஆண்டுவிழா மும்பையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் ஏராளமான திரைத்துறையில் கலந்துகொண்டனர்.
நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தின் (NMACC) 3-வது ஆண்டுவிழா மும்பையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் ஏராளமான திரைத்துறையில் கலந்துகொண்டனர்.
NMACC – எனப்படும் நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையம் இந்திய கலாச்சாரத்தை உலக அளவில் கொண்டு சேர்க்கும் விதமாக உருவாக்கப்பட்டது. இதன் மூன்றாவது ஆண்டுவிழா மும்பையில் இன்று நடைபெற்றது. பாலிவுட் திரையுலகினர் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான சித்தார்த் மல்ஹோத்ரா – கியாரா அத்வானி ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டு கவனத்தை ஈர்த்தனர். கண்ணை கவரும் அலங்காரங்களுடன் கூடிய பிங்க் நிற புடவையில் நடிகை கியாரா அத்வானி ஜொலித்தார். அவர் அணிந்திருந்த வைர நெக்லஸ் பார்வையாளர்களை கவர்ந்தது.
மறுபுறும் கியாரா அத்வானியின் கணவரும், நடிகருமான சித்தார்த் மல்ஹோத்ரா, பிரின்டட் ஜாக்கெட் உடன் கூடிய வெள்ளை குர்தா பைஜாமாவுடன் ஹேன்சமாக காட்சியளித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக இந்த நிகழ்வில் ரன்வீர் சிங், சல்மான்கான், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமான திரைத்துறையினர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 03, 2026 10:34 PM IST