இதைவிட மகிழ்ச்சி என்ன வேணும்? சி.எஸ்.கே அணியை வீழ்த்திய பின்னர் – சுப்மன் கில் ஹேப்பி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 37-வது லீக் போட்டியில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி அசத்தியது. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய சி.எஸ்.கே அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை குவித்தது.

சி.எஸ்.கே அணியை வீழ்த்தியதற்கு பின்னர் : சுப்மன் கில் மகிழ்ச்சி

பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 162 ரன்களை குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி 8 போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றிக்களுடன் 8 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு சென்றது.

அதே வேளையில் சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்திற்கு சறுக்கியது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய சுப்மன் கில் கூறுகையில் : உண்மையிலேயே இந்த வெற்றியை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில் சென்னை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது ஒரு மிகப்பெரிய விடயம்.

இந்தியாவில் விளையாடுவதற்கு சவாலான ஆடுகளங்களில் ஒன்றான இந்த மைதானத்தில் பெற்ற வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டியில் கடைசி நான்கு ஐந்து ஓவர்கள் செய்த பீல்டிங்கை தவிர மற்றபடி எங்களது அணியின் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர் என்று கருதுகிறேன். அதேபோன்று இந்த போட்டியில் எங்களது பந்துவீச்சாளர்கள் பவர்பிளே ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டாலும் இறுதி நேரத்தில் ரன்களை விட்டுக் கொடுத்தனர்.

இதையும் படிங்க : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நாங்க இதை செய்ஞ்சிருந்தா அட்லீஸ்ட் போராடியிருக்கலாம் – ருதுராஜ் கெய்க்வாட் வேதனை

அதனை சரி செய்ய வேண்டிய ஒரு சூழல் இருக்கிறது. அதேபோன்று சாய் சுதர்சன் இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரைப் போன்ற ஒரு வீரர் நிலைத்து நின்று விளையாடினால் நிச்சயம் நமக்கு நல்ல ஒரு இன்னிங்சை பரிசளிப்பார் என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

பதவி இதைவிட மகிழ்ச்சி என்ன வேணும்? சி.எஸ்.கே அணியை வீழ்த்திய பின்னர் – சுப்மன் கில் ஹேப்பி முதலில் தோன்றியது கிரிக் தமிழ்.

Thank You

Related Posts

காற்றில் கலக்கும் பிளாஸ்டிக்.. முந்தைய கணிப்புகளை உடைக்கும் புதிய ஆய்வு முடிவுகள்! | Shocking Study Land Releases 20x More Microplastics Into Air Than Oceans

கடலை விட நிலப்பரப்பில் இருந்துதான் 20 மடங்குக்கும் அதிகமான மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் காற்றில் கலப்பதாக புதிய ஆய்வு ஒன்று கூறியுள்ளது. நம் கண்ணுக்குத் தெரியாத மிகச் சிறிய பிளாஸ்டிக் துகள்களான மைக்ரோபிளாஸ்டிக்ஸ், காற்றில் மிதந்து உலகம் முழுவதும் பரவி வருகிறது. ஆனால்,…

சென்னை டூ திருச்சி வெறும் 2 மணி நேரம் தான்.. ஜெட் வேகத்தில் புல்லட் ரயில்.. சூப்பர் அப்டேட்!

Indias First Bullet Train Update: இந்தியாவின் முதல் புல்லட் ரயில் குறித்து சூப்பர் அப்டேட் வெளியாகி உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். இந்தியாவில் தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

இதைவிட மகிழ்ச்சி என்ன வேணும்? சி.எஸ்.கே அணியை வீழ்த்திய பின்னர் – சுப்மன் கில் ஹேப்பி

  • By admin
  • April 27, 2026
  • 3 views
இதைவிட மகிழ்ச்சி என்ன வேணும்? சி.எஸ்.கே அணியை வீழ்த்திய பின்னர் – சுப்மன் கில் ஹேப்பி

விஜய்யின் பேச்சில் முதிர்ச்சியில்லை.. கூட்டணியை நம்பி திமுக உள்ளதா? ஜவாஹிருல்லா கருத்து – Kumudam

  • By admin
  • April 27, 2026
  • 13 views
விஜய்யின் பேச்சில் முதிர்ச்சியில்லை.. கூட்டணியை நம்பி திமுக உள்ளதா? ஜவாஹிருல்லா கருத்து – Kumudam

காற்றில் கலக்கும் பிளாஸ்டிக்.. முந்தைய கணிப்புகளை உடைக்கும் புதிய ஆய்வு முடிவுகள்! | Shocking Study Land Releases 20x More Microplastics Into Air Than Oceans

  • By admin
  • April 27, 2026
  • 15 views
காற்றில் கலக்கும் பிளாஸ்டிக்.. முந்தைய கணிப்புகளை உடைக்கும் புதிய ஆய்வு முடிவுகள்! | Shocking Study Land Releases 20x More Microplastics Into Air Than Oceans

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – Kumudam

  • By admin
  • April 27, 2026
  • 10 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – Kumudam

மலேசியா கார் ரேஸில் அஜித்குமார் கார் பழுது: ரசிகர்கள் அப்செட் – Kumudam

  • By admin
  • April 27, 2026
  • 4 views
மலேசியா கார் ரேஸில் அஜித்குமார் கார் பழுது: ரசிகர்கள் அப்செட் – Kumudam

ஈரான், அமெரிக்கா 2-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் அடுத்த வாரம் நடக்கிறது ? – Kumudam

  • By admin
  • April 27, 2026
  • 12 views
ஈரான், அமெரிக்கா 2-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் அடுத்த வாரம் நடக்கிறது ? – Kumudam
.site-info { display: none; }