முட்டைபிரியர்கள் அதிர்ச்சி செய்தி, ஆஃபாயில் சாப்பிட வேண்டாம்: தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல் – Kumudam

சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இறந்த காகங்களை பறவைக் காய்ச்சல் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பறவைகளிடையே விரைவாகப் பரவக்கூடியது.பறவைக் காய்ச்சலை உருவாக்கும் எச்5என்1 வைரஸ் கிருமிகள் குறிப்பாக இடம் விட்டு இடம் பறக்கும் புறா, காகம், கொக்கு, நாரை போன்ற பறவைகளால் அதிகமாக பரப்பப்படுகிறது.

தொற்றுநோய் பரவலைத் தடுக்க தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை, மாநிலம் முழுவதும் கண்காணிப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

பறவை காய்ச்சல் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறுகையில்:“பறவைக் காய்ச்சல் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அந்த தகவல் கிடைத்ததும் காகங்கள் உள்ளிட்ட பறவை இனங்கள் திடீரென்று இறந்தால், அதனை பார்ப்பவர்கள் உடனடியாக ஆழமாக குழித் தோண்டி புதைக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், திடீரென்று உயிரிழக்கும் கோழிகளை சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோழி இறைச்சி சாப்பிடுபவர்கள் நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும். ஆஃப் பாயில் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம். தமிழகத்தில் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் நோய்த் தொற்று இதுவரை ஏற்படவில்லை. மாவட்ட அளவில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது” என கூறியுள்ளார்.

Thank You

Related Posts

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 6 – Kumudam

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 6 – மதுகேசவ் பொற்கண்ணன் சொற்களுக்கு உயிர் இருக்கின்றது. என்னது? உயிரா? சொற்களுக்கா? ஆம் நண்பர்களே!  நாம் பேசும்போது ஏதோ வார்த்தைகள்தானே என்று அள்ளித் தெளித்து  பேசுவதாக எண்ணுகிறோம். ஆனால், அந்த சொற்களுக்கு உயிர்…

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 7 – Kumudam

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 7 – மதுகேசவ் பொற்கண்ணன் நம் வாழ்வில் நம்முடன் இருக்கும் உறவுகளும், நண்பர்களும், நம்முடன் பேசுகின்றனர். நாமும் அவர்களுடன் பேசுகின்றோம். வீடுகளில் அலுவலகத்தில், தொழில் செய்யும் இடங்களில்  வாடிக்கையாளர் உரிமையாளர், பொதுவாழ்வில் உள்ள தலைவர்கள்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

திரையுலகிற்கு காலையில் வந்த கெட்ட செய்தி : பிரபல காமெடி நடிகர் காலமானார்  – Kumudam

  • By admin
  • April 22, 2026
  • 10 views
திரையுலகிற்கு காலையில் வந்த கெட்ட செய்தி : பிரபல காமெடி நடிகர் காலமானார்  – Kumudam

மாஸ்டர் GRE & GMAT: குறிப்புகள், தயாரிப்பு, ஆதாரங்கள் – TN செய்திகள்

  • By admin
  • April 22, 2026
  • 9 views
மாஸ்டர் GRE & GMAT: குறிப்புகள், தயாரிப்பு, ஆதாரங்கள் – TN செய்திகள்

வாக்கு வேட்டையில் ‘மீன்’: மம்தா vs பாஜக – மல்லுக்கட்டும் வங்காளத் தேர்தல் களம்!| ‘Fish’ in the Vote Hunt: Mamata vs. BJP — The Bengal Election Arena Locks Horns!

  • By admin
  • April 22, 2026
  • 10 views
வாக்கு வேட்டையில் ‘மீன்’: மம்தா vs பாஜக – மல்லுக்கட்டும் வங்காளத் தேர்தல் களம்!| ‘Fish’ in the Vote Hunt: Mamata vs. BJP — The Bengal Election Arena Locks Horns!

டிவி, ரேடியோவில் வரும் இரைச்சல் சத்தம்; எங்கிருந்து வருகிறது? – இது தெரியாமப் போச்சே?! – 22

  • By admin
  • April 22, 2026
  • 7 views
டிவி, ரேடியோவில் வரும் இரைச்சல் சத்தம்; எங்கிருந்து வருகிறது? – இது தெரியாமப் போச்சே?! – 22

லால்ரின்சுவாலா பிரேஸ் ஐஸ்வால் எஃப்சிக்கு ஐ-லீக் பாதுகாப்பை உறுதி செய்தது

  • By admin
  • April 22, 2026
  • 5 views
லால்ரின்சுவாலா பிரேஸ் ஐஸ்வால் எஃப்சிக்கு ஐ-லீக் பாதுகாப்பை உறுதி செய்தது

சனத் ஜெயசூர்யாவின் 19 ஆண்டுகால சாதனையை சமன் செய்த திலக் வர்மா

  • By admin
  • April 22, 2026
  • 6 views
சனத் ஜெயசூர்யாவின் 19 ஆண்டுகால சாதனையை சமன் செய்த திலக் வர்மா
.site-info { display: none; }